India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஆகஸ்ட் – 22 ▶ஆவணி – 06 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நேரம்: 12:00 AM – 01:00 AM & 06:30 PM – 07:30PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM >▶திதி: த்ரிதியை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம். ▶நட்சத்திரம்: பூரட்டாதி
ஜோர்டனில் நடைபெறும் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த 4 மல்யுத்த வீராங்கனைகள் முன்னேறியுள்ளனர். 43kg எடைப்பிரிவில் அதிதி குமாரியும், 57kg பிரிவில் நேகாவும், 65kg பிரிவில் புல்கிட்டும், 73kg பிரிவில் மான்ஸி லாதெரும் முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான கிரிகோ ரோமன், 110kg பிரிவில் இந்தியாவின் ரோனக் தாஹியா வெண்கலப் பதக்கம் வென்றார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அரசு முறை பயணமாக வருகிற 23 முதல் 26ஆம் தேதி அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க அதிபருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசக உதவியாளர் ஜேக் சல்லிவன் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் லாய்டு ஆஸ்டின் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. பாதுகாப்பு சார்ந்த இருநாட்டு உறவுகள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.
*பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள். *உங்கள் கனவுகளை நம்புங்கள், எதுவும் சாத்தியமாகும். *மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்களுக்கு முதலிடம் கொடுங்கள். *என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும், எனவே என்னை நானே ஒருபோதும் சந்தேகித்ததில்லை. *இங்கே என்னை விட சிறந்த தொடக்க வீரர்கள் உள்ளனர், ஆனால் நான் ஒரு வலுவான முடிக்கும் வீரன்.
2023-2024 ஆண்டிற்கான CEAT கிரிக்கெட் ரேட்டிங் விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. அதில் ரோஹித்திற்கு சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருதும், டிராவிட்டுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. அதேபோல் கோலிக்கு சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருதும், ஷமிக்கு சிறந்த பவுலருக்கான விருதும், அஸ்வினுக்கு டெஸ்ட் பவுலர் விருதும், ஜெய்ஷாவுக்கு சிறந்த விளையாட்டு நிர்வாகத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.
‘வாழை’ படம் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும் என நடிகர் சிம்பு வாழ்த்தியுள்ளார். படம் சிம்பிளான படம் தான், ஆனால் படத்திற்குள் அவ்வளவு வலி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சில சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று முன்தினம் நடந்த இப்படத்தின் Pre Release நிகழ்ச்சியில் இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.
அமெரிக்காவில் 2 வயது குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை நிர்வாண போட்டோ, வீடியோக்களை ரெக்கார்ட் செய்த குற்றத்திற்காக இந்திய மருத்துவர் உமைர் ஏஜாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் ரகசிய கேமராக்களை பொறுத்தி 6 ஆண்டுகளாக அவர் இதை செய்து வந்துள்ளார். அவரிடம் இருந்த 13,000 வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஏஜாஸின் மனைவி அளித்த புகாரில் இந்த் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
▶ 1639- சென்னை தோற்றுவிக்கப்பட்ட நாள். ▶1894 – தென்னாப்பிரிக்காவில் இந்திய வணிகர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகாத்மா காந்தி நட்டால் மாகாணத்தில் நட்டால் இந்தியக் காங்கிரசு என்ற அமைப்பைத் தொடங்கினார். ▶1911 – பாரிசில் திருடப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. ▶1932 – தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.
போலந்தில் இந்திய வம்சாவளியினரிடையே பேசிய பிரதமர் மோடி, இது போருக்கான காலம் அல்ல என தெரிவித்துள்ளார். மனிதநேயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும், இந்தியா எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் விவாதத்தை நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாளை உக்ரைன் செல்ல உள்ள நிலையில், அவரது இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
விஜய பிரபாகரனுக்கு விஜயகாந்தின் முதலாம் நினைவு தினம் முடிந்த பிறகு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் திருமணம் நடைபெறவில்லை. விஜயகாந்தின் மூத்த மகனான இவர், கடந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் வெற்றியை தவறவிட்டார்.
Sorry, no posts matched your criteria.