news

News April 16, 2025

பாஜக-அதிமுக கூட்டணியில் திடீர் விரிசல்?

image

சென்னையில் அண்மையில் பேசிய அமித் ஷா, தமிழகத்தில் தேஜ கூட்டணி ஆட்சியமைக்கும் எனக் கூறியிருந்தார். இதன்மூலம் அதிமுக அமைச்சரவையில் பாஜகவும் இடம்பெறும் என கூறியிருந்தார். இதனால் அதிமுகவினர் அதிருப்தியில் இருந்த நிலையில் இன்று பேசிய இபிஎஸ், அதிமுக அரசில் பாஜகவுக்கு இடமில்லை எனக் கூறினார். இது பாஜக, அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News April 16, 2025

1 சவரன் தங்கம் 4 மாதங்களில் ₹13,320 அதிகரிப்பு

image

1 சவரன் தங்கம் 4 மாதங்களில் ₹13,320 அதிகரித்துள்ளது. ஜன.1-ல் 1 கிராம் ₹7,150ஆகவும், 1 சவரன் ₹57,200ஆகவும் விற்கப்பட்டது. பிப். 1-ல் 1 கிராம் ₹7790, 1 சவரன் ₹62,320-ஆக விற்கப்பட்டது. மார்ச் 1-ல் 1 கிராம் ₹7,940, 1 சவரன் ₹63,520ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் ₹8,815, 1 சவரன் ₹70,520ஆக அதிகரித்துள்ளது. படிப்படியாக விலை அதிகரித்து தங்கம் புதிய உச்சம் தொட்டுள்ளது.

News April 16, 2025

சென்னைவாசிகளே குடையோடு போங்க…

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ஈரோடு, சேலம், தர்மபுரி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

திமுக அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லை: இபிஎஸ்

image

அதிமுக சார்பில் பேரவையில் அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால், அதன் மீது விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதன் காரணமாகவே பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என இபிஎஸ் தெரிவித்தார். இதற்கு முந்தைய காலங்களில், அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அனுமதியளிக்கப்பட்டதாகவும், தற்போது ஏன் மறுக்கிறார்கள் என தெரியவில்லை என கூறினார்.

News April 16, 2025

அந்த நடிகர் போதையில் தப்பா நடந்துக்கிட்டாரு- நடிகை வின்சி!

image

பிரபல மலையாள நடிகை வின்சி அலோசியஸ், மலையாள முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடமும், மற்றொரு நடிகையிடமும் அத்துமீறி நடந்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். படத்தில் இருந்து விலக நினைத்த போது, டைரக்டரும், தயாரிப்பாளரும் மன்னிப்பு கேட்டதால், வேறு வழியின்றி அப்படத்தில் நடித்ததாக தெரிவித்தார். வின்சி அலோஷியஸ் ஜன கண மன, சவுதி வெள்ளக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார். அந்த நடிகர் யாராக இருக்கும்?

News April 16, 2025

சட்டப்பேரவையில் கடும் அமளி.. அதிமுக வெளிநடப்பு

image

சட்டப்பேரவையில் இருந்து இபிஎஸ் தலைமையிலான அதிமுக MLA-க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கே,என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், சபாநாயகர் அப்பாவு அதனை நிராகரித்தார். இதைத் தொடர்ந்து, பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

News April 16, 2025

பவன் கல்யாணுடன் இணைந்த சிம்பு..!

image

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘OG’ படத்தில் சிம்பு Firestorm என்ற பாடலை பாடியுள்ளார். இது குறித்து இசையமைப்பாளர் தமன், ‘Mass Rampage coming soon’ என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, தமன் இசையில் விஜய்க்காக சிம்பு பாடிய ‘தீ தளபதி’ பெரிய ஹிட்டான நிலையில், அது போன்ற ஒரு வெறித்தனமான பாடலாக இதுவும் இருக்குமா?

News April 16, 2025

BREAKING: தங்கம் விலை ₹760 உயர்வு

image

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரு சவரனுக்கு ₹760 உயர்ந்துள்ளது. நேற்று 1 கிராம் ₹8,720-க்கும், 1 சவரன் தங்கம் ₹69,760-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் ₹95 உயர்ந்து, ₹8,815-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ₹760 அதிகரித்து, ₹70,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 1 கிராம் ₹35-ம், 1 சவரன் தங்கம் ₹280-ம் குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

News April 16, 2025

அரசாணை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும்: TN அரசு

image

தமிழில் மட்டுமே இனி அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும். கற்றாணைக் குறிப்புகள், துறை தலைமை அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கருத்துரைகளும் தமிழிலேயே இருக்க வேண்டும். அதே போல், பொதுமக்களிடம் இருந்து வரும் கடிதங்களுக்கும் தமிழிலேயே பதில் அளிக்க வேண்டும் எனவும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News April 16, 2025

BSP மாநில தலைவர் ஆனந்தன் மீது பொற்காெடி பகீர் புகார்

image

BSP மாநில தலைவர் ஆனந்தன் மீது பொற்காெடி பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். BSP-யிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பாேது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை நடத்துவதாக கூறி கட்சிக்குள் வந்துவிட்டு, தன்னையே ஆனந்தன் நீக்கி விட்டதாக விமர்சித்தார். இதன் பின்னணி குறித்து தெரியவில்லை, கட்சியின் பாெதுக் குழுவை கூட்டி விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.

error: Content is protected !!