India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பேசுகையில், “தொழில் மற்றும் தொழில்நுட்பத்துடன் தொடர்புடைய மொழியாக இந்தி மாறி வருகிறது. அந்த வகையில், நவீன தொழில்நுட்பங்களை இந்தியுடன் இணைக்கும் பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பணி சார்ந்த மொழியாக (Work Language) இந்தி கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
மாணவர்கள் நலனில் அக்கறை இருப்பது போல, CM ஸ்டாலின் கபட நாடகம் ஆடுவதாக தமிழக பாஜக விமர்சித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை மூலம் ஏழை மாணவர்கள் பிற மொழிகளை கற்கலாம் எனக் குறிப்பிட்ட BJP, இதற்கு முட்டுக்கட்டை போடுவதுதான் CMன் இலக்கணமா என வினவியுள்ளது. மேலும், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைத்துவிட்டால், திராவிட மாடல் சிதறிவிடும் என்ற பயத்தில், NEPஐ அவர் எதிர்ப்பதாகவும் TN BJP குற்றஞ்சாட்டியுள்ளது.
*மேஷம் – உற்சாகமான நாளாக அமையும் *ரிஷபம் – வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் *மிதுனம் – புதிய நட்பு உருவாகும் *கடகம் – வாழ்க்கையில் உயர்வு இருக்கும் *சிம்மம் – போட்டி உண்டாகும் *கன்னி – எதிர்ப்பு உருவாகும் *துலாம் – பொறுமையாக செயல்படுங்கள் *விருச்சிகம் – ஏமாற்றம் ஏற்படும் *தனுசு – பண வரவு இருக்கும் *மகரம் – வெற்றி உண்டாகும் *கும்பம் – கடினமாக உழைக்க வேண்டும் *மீனம் – விவேகத்துடன் செயல்படுங்கள்.
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 படுகொலைகள் நடந்ததால், சட்டம் – ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக கேள்வி எழுப்பினர். இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால், நேற்று நடந்த 6 படுகொலைகளும் சொத்து தகராறு, முன் விரோதத்தில் நடந்தவை. சாதி, மத மோதலோ, கலவரத்தாலோ நடைபெறவில்லை. கொலைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று விளக்கமளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான “GOAT” படம் வசூலை குவித்தாலும், விமர்சனமும் எழுந்து வருகிறது. இதுகுறித்து இயக்குநர் வெங்கட் பிரபு, GOAT படத்தில் CSK Reference இருப்பதால், இந்தி, தெலுங்கு ஆடியன்ஸிடம் சரியாக சென்றடையவில்லை என நினைக்கிறேன். அதேபோல், CSK ரசிகன் என்பதால்,MI & RCB ரசிகர்கள் என்னை Troll பண்றாங்க. ஆனால், இரத்தத்தால் நான் CSK Supporter, இதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது என்றார்.
இரவில் அதிக நேரம் விழித்திருப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 50% அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தாமதமாக உறங்க சென்று, தாமதமாக எழுந்திருப்பவர்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிலும், அதிக உடல் கொழுப்பு கொண்டவர்களுக்கு ஆபத்து அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. நீங்கள் எத்தனை மணிக்கு தூங்கி, எழுந்திருக்கிறீர்கள்?
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர், செப்.12 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அறிவித்துள்ளது. ஜன.10ஆம் தேதி பயணிப்போர் செப்.12ஆம் தேதியும், ஜன.11ஆம் தேதி பயணிப்போர் செப்.13ஆம் தேதியும், ஜன.12ஆம் தேதி பயணிப்போர் செப்.14ஆம் தேதியும், ஜன.14ஆம் தேதி பயணிப்போர் செப்.15ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம். ரயில் நிலைய கவுன்ட்டர்கள், IRCTC இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். #SHARE IT.
10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு செய்ய அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். myAadhaar போர்ட்டலில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்.14. அதன்பிறகு, ஆதார் அட்டையை புதுப்பிக்க, நீங்கள் ₹25 கட்டணம் செலுத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து தன்னிச்சையாக பெயர்களை நீக்க முடியாது என சத்யபிரதா சாகு கூறியுள்ளார். முகவரி மாற்றம், இறப்பு போன்ற காரணங்களுக்காக மட்டுமே பெயர்களை நீக்க முடியும் எனக் குறிப்பிட்ட அவர், வாக்காளர்களிடம் விளக்கம் கேட்ட பிறகுதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். முன்னதாக வாக்காளர்களிடம் தகவல் தெரிவிக்காமல் ஆயிரக்கணக்கான பெயர்களை நீக்கியதாக R.S.பாரதி குற்றஞ்சாட்டியிருந்தார்.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ படம், செப்டம்பர் 13ஆம் தேதி OTTயில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘காந்தாரா’, ‘KGF’ போன்ற படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸான ‘ரகு தாத்தா’ கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்தி மொழி தொடர்பான கதைக்களத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.