news

News September 15, 2024

நர்மதா நதியோர நகரங்களில் மதுவுக்கு தடை

image

நர்மதா நதிக்கரையோரம் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அதையொட்டிய இடங்களில் மது, இறைச்சி தடை செய்யப்படுவதாக ம.பி., மாநில CM தெரிவித்துள்ளார். நர்மதா நதி செயல்திட்டம் குறித்து CM மோகன் யாதவ் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், நதிக்கரையோர குடியிருப்பில் இருப்பவர்கள் நதியில் கழிவுநீரை விடக்கூடாது, இறைச்சி, மது சாப்பிடக்கூடாது என்றும், ட்ரோன் மூலம் அப்பகுதி கண்காணிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

News September 15, 2024

ராசி பலன்கள் (15.09.2024)

image

*மேஷம் – எதிர்ப்புகள் இருக்கும் *ரிஷபம் – போட்டி ஏற்படும் *மிதுனம் – விவேகம் கைகொடுக்கும் *கடகம் – அச்சம் நிலவும் *சிம்மம் – பாசம் கிடைக்கும் *கன்னி – செல்வம் சேரும் *துலாம் – வீம்பு வேண்டாம் *விருச்சிகம் – பெருமை கிடைக்கும் *தனுசு – மகிழ்ச்சி உண்டாகும் *மகரம் – ஆக்கமாக செயல்படுவீர் *கும்பம் – அமைதி நிலவும் *மீனம் – நலம் உண்டாகும்.

News September 15, 2024

வானிலிருந்து ஓட்டு போட போறோம்: சுனிதா

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்தவாறு வாக்களிக்க உள்ளதாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அறிவித்துள்ளனர். ஸ்டார்லைனர் விண்கலனை சோதிக்க ஜூன் 6இல் ISS சென்ற அவர்கள், தொழில்நுட்பக் கோளாறால் அங்கேயே சிக்கியுள்ளனர். இந்நிலையில், நவம்பர் 5ஆம் தேதி USAவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பதாக கூறியுள்ளனர். 2025 பிப்ரவரியில் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

News September 14, 2024

தேர்வில் முறைகேட்டை தடுக்க இணைய சேவை முடக்கம்

image

அசாமில் நாளை அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. அதனால், தேர்வு நடைபெறும் காலை 10.30 மணி – 1.30 மணி வரை தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 1.10 லட்சம் பேர் பங்கேற்கும் தேர்வில், ஆன்லைன் முறைகேட்டை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேர்மையான முறையில் தேர்வை நடத்திட வேண்டி, நன்கு ஆலோசிக்கப்பட்ட பின் எடுத்த முடிவு இது என அரசு தெரிவித்துள்ளது.

News September 14, 2024

SEMIயில் இந்தியா-தென் கொரியா

image

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில், இந்தியா-தென் கொரியா அணிகள் மோதவுள்ளன. சீனா ஹுலுன்பியுரில் நடைபெற்று வரும் 8ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில், இந்தியா உள்பட 6 நாடுகள் பங்கேற்றன. ஜப்பான், மலேசியா லீக் சுற்றுடன் வெளியேறின. இதையடுத்து செப்.16இல் நடைபெறும் SEMIயில், IND-SK மோதவுள்ளன. மற்றொரு போட்டியில் சீனா-பாகிஸ்தான் மோதுகின்றன. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லுமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 14, 2024

RG Kar மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கைது

image

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் RG Kar மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் ஒரு காவலரை CBI போலீசார் கைது செய்துள்ளனர். கொலை விவகாரம் பூதாகரமாக பின் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஊழல் வழக்கில் CBI அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது கொலை வழக்கில் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக அவரை கைது செய்துள்ளனர்.

News September 14, 2024

மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு தம்பதியை வாழ்த்திய CM

image

நடிகை மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு தம்பதியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடந்தது. இதில், CM ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியாக வலம் வரும் மேகா ஆகாஷூக்கு, கடந்த மாதம் அவரது காதலனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகன் சாய் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரின் மகன் ஆவார். நாளை இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது.

News September 14, 2024

நாளை மறுநாள் பயணத்தை தொடங்கும் ‘வந்தே மெட்ரோ’

image

நாட்டின் முதல் ‘வந்தே மெட்ரோ’ ரயிலை PM மோடி நாளை மறுநாள் குஜராத்தில் தொடங்கிவைக்கிறார். அகமதாபாத் – புஜ் இடையே இயக்கப்படும் இந்த ரயில் முழுவதும் குளிர்சாதன பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா ரயிலாக இயக்கப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் 3000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யலாம் என்றும், ரயில் புறப்படும் சில நிமிடங்களுக்கு முன்பாக பயணிகள் கவுண்ட்டரில் டிக்கெட்டை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2024

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

image

இந்திய அரசியலமைப்பு தின விழா, பாரதியாரின் 143வது பிறந்தநாள் விழாவையொட்டி, மாநில அளவிலான கட்டுரை போட்டிகளை ஆளுநர் ரவி அறிவித்துள்ளார். 6-12ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்ட உருவாக்கம், உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரைகளை நாளைக்குள் (செப்.15) ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப வேண்டும். வெற்றியாளர்களுக்கு 2025 குடியரசு தினத்தன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

News September 14, 2024

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கடிதம் ₹32 கோடிக்கு ஏலம்

image

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று ₹32 கோடிக்கு ஏலம் போயுள்ளது. அணு ஆயுதங்களின் திறன் குறித்து, 1939ஆம் ஆண்டு USA அதிபராக இருந்த ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெட்டிற்கு அவர் கடிதம் ஒன்றை எழுதினார். இந்தக் கடிதம் அமெரிக்க அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. பின்னாளில், மனித உயிர்கள் பறிபோக அணு ஆயுதம் காரணமாக இருந்ததை அறிந்து அவர் வேதனை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!