news

News September 15, 2024

வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியது இலங்கை

image

வாகன இறக்குமதி மீதான தடையை இலங்கை அமைச்சரவை நீக்கியுள்ளது. கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடியின்போது அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்க இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பின் கட்டுப்பாடுகளை நீக்கி அதிபர் மாளிகை உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக அக். 1ஆம் தேதி பொது போக்குவரத்து வாகனங்களுக்கான தடை நீக்கப்படுகிறது.

News September 15, 2024

பிரதமர் வாய்ப்பு தறேனு சொன்னாங்க…

image

எந்த சலுகையும் தனது ஆசையை தூண்டாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூரில் பத்திரிகை விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், தான் ஒரு உறுதியான சித்தாந்தத்தால் வழி நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டு பேசினார். மேலும், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மூத்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் பிரதமர் வாய்ப்பு அளிப்பதாக ஆசை காட்டியதாகவும், தான் அதை நிராகரித்ததாகவும் கூறினார்.

News September 15, 2024

54ஆவது அகவையில் சிவகாமி தேவி

image

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், வெற்றி பெற்ற நடிகையாக வலம் வருகிறார். மேலும், 5 மொழி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். அம்மன் வேடத்திற்கு பொருத்தமான நடிகை என ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவர், ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கே சவால் விட்டவர். இன்று 54ஆவது பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு வாழ்த்துகள்.

News September 15, 2024

ஓணத்தில் ஏன் அத்தப்பூ கோலம் இடப்படுகிறது

image

ஓணம் பண்டிகையின் போது தங்கள் வீடு தேடி வரும் மகாபலி அரசனை வரவேற்க அத்தப்பூ கோலம் இடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்தப்பூ என்ற பூவைப் பறித்து பூக்கோலத்தில் முதலில் வைத்தே கோலத்தை தொடங்குவர். முதல் நாள் ஒரு வகை, 2ஆம் நாள் 2, 3ஆம் நாள் 3 என 10ஆம் நாள் 10 வகையான பூக்களால் கோலத்தை அழகுபடுத்துவார்கள். அத்தப்பூ இடுவதற்காக தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களை அதிகம் பயன்படுத்துவர்.

News September 15, 2024

பாய்ச்சல் காட்டும் இந்திய மகளிர் அணி

image

செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவு 4ஆவது சுற்றில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. பிரான்ஸை எதிர்கொண்ட இந்திய அணி 3.5 – 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. All the best team.

News September 15, 2024

ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

image

காலையில் வெறும் வயிற்றில், ஒரு தேக்கரண்டி தூய நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு 15 முதல் 20 நிமிடங்களுக்கு, கொப்பளித்து ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம். ▶ ஈறுகளில் வீக்கத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ▶ வாய் துர்நாற்றத்தை போக்கும். ▶ பாக்டீரியாக்களை ஒழிக்கும். ▶ பற்கள் சிதைவதைத் தடுத்து பல் சொத்தையைத் தடுக்கிறது.

News September 15, 2024

வரலாற்று உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

image

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இது செப். 6ஆம் தேதி கணக்கெடுப்பின்படி, $5.24 பில்லியன் உயர்ந்து, $689.23 பில்லியனாக இருந்து. தங்கம் கையிருப்பு $129 மில்லியன் உயர்ந்து, $61.98 பில்லியனாக அதிகரித்துள்ளது. சிறப்பு வரைதல் உரிமம் (SDR) பொறுத்தமட்டில் $9 மில்லியன் அதிகரித்து, $4.63 பில்லியனாக இருப்பதாக RBI தரவுகள் காட்டுகின்றன.

News September 15, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶ குறள் எண்: 53 ▶ குறள்: இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. ▶ பொருள்: நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

News September 15, 2024

வக்பு வாரிய தலைவரின் ராஜினாமா ஏற்பு

image

தமிழக வக்பு வாரிய தலைவரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக TN அரசு அறிவித்துள்ளது. இந்திய முஸ்லிம் லீக்கை சேர்ந்த அப்துல் ரகுமான், 2021இல் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வக்பு வாரிய திருத்தம் தொடர்பான விவகாரங்களில் சிக்கல் எழுந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம் மீதான நடவடிக்கையில் நிலுவையில் இருந்த சூழலில், தற்போது ஏற்கப்பட்டுள்ளது.

News September 15, 2024

தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா

image

செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவு 4ஆவது சுற்றில் இந்திய ஆண்கள் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. செர்பியாவை எதிர்கொண்ட இந்திய அணி 3.5 – 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. மொத்தம் 11 சுற்றுகள் நடைபெறும் நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகளும், டிராவுக்கு தலா ஒரு புள்ளிகளும் வழங்கப்படும்.

error: Content is protected !!