India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை ஆய்வு செய்த பின் பேட்டி அளித்த அவர், கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளதாகக் கூறினார். மேலும், வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் அவர் பாராட்டினார்.
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் RTO சஸ்பெண்ட் செய்துள்ளார். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய இவர், காரில் சென்றபோது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முகமது பஹீம் என்பவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பாசி ஜாமின் பெற்ற நிலையில், லைசன்ஸ் ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி எந்த வளர்ச்சியும் காணவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் விமர்சித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் மெதுவான ஆடுகள சூழலுக்கு ஏற்ற வகையில் இந்திய அணி WC T20 தொடரில் விளையாடவில்லை என சாடிய அவர், தேர்வாளர்கள் கேப்டனை மாற்ற வேண்டும் என நினைத்தால், இளம் வீராங்கனையான ஜெமிமா ரொட்ரிக்கஸை தேர்வு செய்யலாம் என்றார்.
Android, Google Chrome OS பயனர்களுக்கு மத்திய அரசின் CERT அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. Chrome 129.0.6668.100, 129.0.6668.89 பிரவுசர்கள், Android 12, 12L, 13, 14, 15 ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அம்ச குறைபாடுகளை பயன்படுத்தி கணினிகள், மொபைல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்து தரவுகளைத் திருடக்கூடும். இதைத் தவிர்க்க உடனடியாக அதை அப்டேட் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT.
வெனிசுலாவில் ஆட்சியை கவிழ்ப்பதற்காக எலான் மஸ்க் ₹8,400 கோடி செலவு செய்திருப்பதாக அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த ஜூலையில் நடந்த அதிபர் தேர்தலில் மதுரோ 3ஆவது முறையாக மீண்டும் வென்றார். ஆனால், தேர்தலில் அவர் மோசடி செய்ததாக எலான் மஸ்க் விமர்சித்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வார்த்தை போர் நீடிக்கிறது. இந்நிலையில் மதுரோ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
IND-NZ அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்நிலையில் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், போட்டி கைவிட அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவுள்ள நிலையில், இத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மழைக்காலத்தில் ஏற்படும் சூழலியல் மாற்றம் (வெப்பம் குறைவதால்) காரணமாக வைரஸ், பாக்டீரியா தொற்றுப்பரவல் அதிகரிக்கும். இந்த சூழலில் மனித உடலில் நோய் எதிர்ப்பாற்றலும் குறையும். இதனால் எளிதில் காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இந்நேரத்தில், காடை, சாலமன் மீன், மஞ்சள், இஞ்சி, பூண்டு, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பெர்ரி, தினை வகைகள் உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
பழைய ₹100 நோட்டுகள் செல்லாது என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள RBI, இத்தகவல் தவறானது எனவும், பழைய மற்றும் புதிய ₹100 நோட்டுகள் இரண்டும் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், பழைய ₹100 நோட்டுகளை காலக்கெடு, கட்டணம் எதுவுமின்றி எந்த வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
கனமழையில் மீட்பு, நிவாரணப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் துணை முதல்வர் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், இன்று கனமழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், சென்னையில் எங்கும் வெள்ளம் தேங்காமல் வடிந்திருப்பதே பழனிசாமிக்கான வெள்ளை அறிக்கை என அவர் பதிலடி கொடுத்தார்.
சென்னை மாநகராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடைபெற்றது. நேற்று பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.