News October 16, 2024
‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரின் லைசன்ஸ் சஸ்பெண்ட்

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் RTO சஸ்பெண்ட் செய்துள்ளார். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய இவர், காரில் சென்றபோது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முகமது பஹீம் என்பவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பாசி ஜாமின் பெற்ற நிலையில், லைசன்ஸ் ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
கடன் செயலிகளில் கடன் வாங்குவதற்கு முன்..

உடனடி தேவைக்காக கடன் செயலியில் கடன் வாங்குவோர், இவற்றை கவனியுங்க:
*கடன் செயலிகளில் கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.
*வாங்க நினைத்தால், அந்த ஆப் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்றதா என்பதை கவனிக்கவும்
*அத்துடன் அந்த செயலி NBFC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
*Playstore-ல் இருக்கும் ஆப்களை மட்டுமே பயன்படுத்தவும். மெசெஜ் வழியாக கிடைக்கும் ஆப்களில் கடன் பெற வேண்டாம்.
News July 8, 2025
Freshersகளுக்கு அதிக சம்பளம் வழங்கும் நகரம் எது?

முதல் சம்பளம் குறைவாக இருந்தாலும், அதிலிருக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாது என்பார்கள். அந்த வகையில் இந்தியாவில் எந்த நகரத்தில் Freshersகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது என ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் (₹30,100) வழங்கி சென்னை முதலிடத்திலும், ஹைதராபாத்(₹28,500), பெங்களூர் (₹28,400) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்கள் Freshersகளுக்கு Hotspot-ஆக உள்ளதாம்.
News July 8, 2025
14 நாடுகளுக்கு வரி விதிப்பை அறிவித்த டிரம்ப்

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரி விதிப்பை அறிவித்த டிரம்ப் ஆக.1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியாவுக்கு 26% வரியும், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, துனிசியா, கஜகஸ்தானுக்கு தலா 25% வரியும் விதிக்கப்பட்டுள்ளது, லாவோஸ் – 40, மியான்மர் – 40%, தென் ஆப்ரிக்கா – 30%, இந்தோனேசியா – 32%, கம்போடியா – 36%, செர்பியா – 35%, வங்கதேசம் – 35% இனி இறக்குமதி வரியாகும்.