news

News October 16, 2024

அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்

image

மகளிர் T20 உலகக் கோப்பையில் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் AUS, NZ, SA, WI ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா, பாக்., இலங்கை, இங்கிலாந்து, வ.தேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் லீக் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளன. அரையிறுதிப் போட்டிகள் நாளை (அக்.17) மற்றும் அக்.18 ஆகிய தேதிகளிலும், இறுதிப் போட்டி அக்.20 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

News October 16, 2024

கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் ‘ககன மார்கன்’

image

விஜய் ஆண்டனி தயாரித்து, நடிக்கும் ‘ககன மார்கன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டக்கத்தி, சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, உயர் காவல் அதிகாரியாக மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

News October 16, 2024

சென்னையில் நாளை மிக கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும் முன்னறிவித்துள்ளது.

News October 16, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 11.30 மணிக்கு GK வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) நெருப்புக்கோழி 2) கோமோடோ பல்லி 3) இலங்கை 4) விலாங்கு மீன் 5) Crime Branch Crime Investigation Department 6) 36 ஆண்டுகள் 7) K2 சிகரம் (சீனா-பாக் எல்லை). இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 16, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS

image

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dearness Allowance) மத்திய அரசு உயர்த்தி அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. தீபாவளி பரிசாக அகவிலைப்படியை 3% உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 49 லட்சம் ஊழியர்களும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். இத்தொகை ஜூலை 2024 முதல் முன்தேதியிட்டு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டும், பண்டிகை காலத்திலேயே 4% DA உயர்த்தப்பட்டது.

News October 16, 2024

நெஞ்சு சளியை விரட்டி அடிக்கும் மஞ்சள் பால்

image

மழைக்காலத்தில் ஏற்படும் நெஞ்சு சளி, தொண்டை வறட்சி, இருமல், உடல்வலி, கீழ்வாதம் & சைனஸ் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் மஞ்சள் பாலைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அழற்சி எதிர்ப்பு & ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்ட மஞ்சளை பசும்பாலில் கலந்து ஏலக்காய், இஞ்சி, மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான மஞ்சள் பால் ரெடி.

News October 16, 2024

விரைவில் நிரந்தர தீர்வு: முதல்வர்

image

வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை ஆய்வு செய்த பின் பேட்டி அளித்த அவர், கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளதாகக் கூறினார். மேலும், வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் அவர் பாராட்டினார்.

News October 16, 2024

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரின் லைசன்ஸ் சஸ்பெண்ட்

image

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகர் ஸ்ரீநாத் பாசியின் ஓட்டுநர் உரிமத்தை எர்ணாகுளம் RTO சஸ்பெண்ட் செய்துள்ளார். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய இவர், காரில் சென்றபோது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முகமது பஹீம் என்பவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பாசி ஜாமின் பெற்ற நிலையில், லைசன்ஸ் ஒரு மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

News October 16, 2024

மகளிர் அணி கேப்டனாக ஜெமிமாவுக்கு மிதாலி ஆதரவு

image

கடந்த 3 ஆண்டுகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி எந்த வளர்ச்சியும் காணவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் விமர்சித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் மெதுவான ஆடுகள சூழலுக்கு ஏற்ற வகையில் இந்திய அணி WC T20 தொடரில் விளையாடவில்லை என சாடிய அவர், தேர்வாளர்கள் கேப்டனை மாற்ற வேண்டும் என நினைத்தால், இளம் வீராங்கனையான ஜெமிமா ரொட்ரிக்கஸை தேர்வு செய்யலாம் என்றார்.

News October 16, 2024

ஆண்ட்ராய்டு, Chrome பயனர்களுக்கு எச்சரிக்கை!

image

Android, Google Chrome OS பயனர்களுக்கு மத்திய அரசின் CERT அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. Chrome 129.0.6668.100, 129.0.6668.89 பிரவுசர்கள், Android 12, 12L, 13, 14, 15 ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அம்ச குறைபாடுகளை பயன்படுத்தி கணினிகள், மொபைல்களை ஹேக்கர்கள் ஹேக் செய்து தரவுகளைத் திருடக்கூடும். இதைத் தவிர்க்க உடனடியாக அதை அப்டேட் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது. SHARE IT.

error: Content is protected !!