news

News October 16, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 16, 2024

பழைய ₹100 நோட்டுக்கள் செல்லாதா? RBI விளக்கம்

image

பழைய ₹100 நோட்டுக்கள் செல்லாது என்றும், சில கடைகளில் வாங்க மறுக்கின்றனர் என்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து RBI விளக்கம் அளித்துள்ளது. அந்த தகவல் தவறானது, வதந்தி என்று மறுத்துள்ள RBI, பழைய ₹100 நோட்டுக்களை வாங்க மறுப்போர் மீது புகார் அளிக்க கேட்டுக் கொண்டுள்ளது. உங்களிடம் யாரேனும் பழைய ₹100 நோட்டுக்களை வாங்க மறுத்தார்களா? கீழே பதிவிடுங்கள்.

News October 16, 2024

கனமழை நீடிப்பு: சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று லீவ்

image

தொடர் கனமழை காரணமாகவும், அதி கனமழை எச்சரிக்கையாலும் சென்னை ஐகோர்ட்டுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான பணிகள் இன்று நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெட்ரோல் நிலையங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நிறுவனங்கள் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

News October 16, 2024

11 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

கனமழை காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News October 16, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 16, 2024

13 மாவட்டங்களில் காலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

இன்று காலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலையில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. திருப்பத்தூர், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது. SHARE IT.

News October 16, 2024

வேட்டையனில் நடிக்க மறுத்தாரா நானி?

image

ஞானவேல்ராஜா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தில் பகத் பாசில் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நானியை படக்குழு அணுகியதாகவும், ஆனால் கதாபாத்திரத்துக்கு போதிய முக்கியத்துவம் இல்லை எனக் கூறி அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இது உண்மையா என்பது தெரியவில்லை.

News October 16, 2024

இன்றும் அதி கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 1) அதி கனமழை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் 2) மிக கனமழை: வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் 3) கனமழை: கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 16, 2024

இந்தியா-நியூசி முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

image

இந்தியா, நியூசி. அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. நியூசி. அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் காெண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட், பெங்களூரில் இன்று முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியை Sports 18-1 SD, Sports 18-1 HD, Sports 18-2 (Hindi) டிவிக்களில் காணலாம். JioCinema app மற்றும் வெப்சைட்டிலும் போட்டியை காண முடியும்.

News October 16, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக். 16 (புரட்டாசி 30) ▶புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM▶ திதி: சதுர்தசி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு▶ பரிகாரம்: பால் ▶ நட்சத்திரம்: உத்திரட்டாதி ▶சந்திராஷ்டமம்: மகம், ஆயில்யம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!