News October 16, 2024
இந்தியா-நியூசி முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா, நியூசி. அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. நியூசி. அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் காெண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட், பெங்களூரில் இன்று முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியை Sports 18-1 SD, Sports 18-1 HD, Sports 18-2 (Hindi) டிவிக்களில் காணலாம். JioCinema app மற்றும் வெப்சைட்டிலும் போட்டியை காண முடியும்.
Similar News
News July 9, 2025
13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இன்று (ஜூலை 9) இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, நெல்லையில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது.
News July 9, 2025
கோயில் நிதியில் கல்லூரியா? இபிஎஸுக்கு சேகர்பாபு பதிலடி

அறியாமை இருளில் இபிஎஸ் மூழ்கியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். கோயில் நிதியை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுவதாக கோவை பிரச்சாரத்தில் <<17000758>>இபிஎஸ் குற்றம்சாட்டியதற்கு<<>> சேகர்பாபு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வரலாறு தெரியாமல் இபிஎஸ் பேசிவருவதாகவும் சாடியுள்ளார்.
News July 9, 2025
வீட்டை காலி செய்ய வந்த அதிகாரி.. இறந்து கிடந்த நடிகை

பாக்., <<17004189>>நடிகை Humaira Asghar <<>>மரணம் குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. வாடகை வீட்டுக்கு ஓராண்டாக பணம் கொடுக்காததால் உரிமையாளர் வழக்குத் தொடுத்துள்ளார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி, நடிகையை வீட்டில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் வந்தபோது துர்நாற்றம் வீசவே, கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அவர் சடலமாக கிடந்தார். 15 நாளுக்கு முன்பு இறந்தது தெரிய வந்தது.