India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எல்லையில் இருந்து இந்தியாவும், சீனாவும் தங்களது ராணுவத்தை திரும்பபெறத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் இருநாடுகளுக்கும் இடையே தீர்மானம் எட்டப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டு, இந்திய வீரர்கள் மேற்கு பகுதிக்கும், சீன வீரர்கள் கிழக்கு பகுதிக்கும் திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேட்டையன் படத்திற்கு பிறகு கூலி படத்தில் நடிகர் ரஜினி நடித்து வந்தார். இடையே திடீரென உடல்நிலை பாதிக்கப்பட அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய ரஜினி, 2 வாரமாக ஓய்வு எடுத்து வந்தார். இதனால் கூலி பட சூட்டிங் தடைபட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு ரஜினி மீண்டும் நடித்தார்.
சென்னை மாநகர பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் குடும்பத்துக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நடத்துநர் ஜெகன்குமாருக்கும், போதையில் இருந்த பயணி கோவிந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இதில் கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஜெகனின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, அக். 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அத்துறையின் அமைச்சர் பெரியகருப்பன் கூறியிருந்தார். இந்த விடுமுறை நாளில் பணியாற்றுவதற்கு ஈடாக நவ. 16ம் தேதி (சனிக்கிழமை) அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வேட்டையன்’ திரைப்படம் நவ.7ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹90 கோடிக்கு அமேசான் நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ₹300 கோடி பட்ஜெட்டில் உருவான ‘வேட்டையன்’, தியேட்டரில் வெளியான 15 நாள்களில் ₹141.5 கோடியை இந்தியாவில் வசூல் செய்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அக்.10ல் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
பிறந்த இடம், சாதி, மதம், இனம், மொழி, சமயம், வசிப்பிடம், பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக செயல் (அ) பேச்சு (அ) எழுத்தாலோ பகைமை, வெறுப்பு உணர்ச்சிகளை தூண்டி மற்றொரு மக்கள் குழுவை அணித்திரட்டுவது (அ) அமைதியின்மை ஏற்படுத்துவது BNS சட்டப் பிரிவு 196 (1)இன்படி குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை & அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
மக்களவைத் தேர்தலை நாடாளுமன்ற தேர்தலோடு ஒப்பிடக்கூடாது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளை நம்பியே முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் களம் காண்பதாக விமர்சித்தார். மேலும் 2019 மக்களவைத் தேர்தலை விட 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கி 7% குறைந்துள்ளதாகவும், ஆனால் அதிமுகவின் வாக்கு வங்கி 1% அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
NZ-க்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 156 ரன்களுக்கு IND ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜடேஜா 38, ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் 30 ரன்களை எடுத்தனர். NZ பவுலர் மிட்செல் சான்ட்னர் 7 விக்கெட்களை கைப்பற்றினார். இந்திய அணி 103 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், 1-0 என NZ முன்னிலையில் உள்ளது. 2ஆவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் IND உள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஒரே நாளில் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 286 புள்ளிகள் சரிந்து 24,113 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் சென்செக்ஸ் 6,600 புள்ளிகள் சரிந்ததால், முதலீட்டாளர்களின் போர்ட்ஃபோலியோ மதிப்பு ₹100 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது.
வருவேன்… வரமாட்டேன்… மையம், விளிம்பு… இப்படி எந்த ஊசலாட்டமும் இன்றி, நிதானமாக திட்டமிட்டு 2026-ஐ இலக்கு வைத்து களமிறங்குகிறார் விஜய். ஆரம்பத்தில் அலட்சியம் காட்டிய பெரிய கட்சிகள், இப்போது உற்றுநோக்கி வருகின்றன. பெரிய கட்சிகளான DMK, ADMK-வின் 2026 தேர்தல் வியூகம், விஜய்யின் நகர்வின் அடிப்படையில் தான் இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். தமிழக அரசியல் களத்தில் அதிர்வை ஏற்படுத்துமா தவெக?
Sorry, no posts matched your criteria.