news

News November 10, 2024

தினமும் காலை எழுந்ததும் இதை செய்ய மறவாதீர்கள்

image

*ஒரு சில நிமிடங்கள் மனதை லேசாக்கி ஆழ்ந்த மூச்சு விடுங்கள்
*ஓவ்வொரு நாளையும் புதிதாக தொடங்குங்கள்
*காலை உணவை உட்கொள்ள தவறாதீர்கள்
*இன்றைய நாளுக்கான உங்கள் வேலைகளை பட்டியலிடுங்கள்
*சுறுசுறுப்பாக இருங்கள்
*சக ஊழியர்களிடம் புன்னகையுடன் பேசுங்கள்.

News November 10, 2024

டேனியல் பாலாஜி நடித்த ’BP 180’ ஃபர்ஸ்ட் லுக்

image

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த ‘BP 180’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் அமுதன் கதாபாத்திரம் மூலம் ஃபேமஸான அவர், கடந்த மார்ச் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். மறைவுக்கு முன் கமிட்டாகியிருந்த இந்த படத்தில், தன்யா ரவிச்சந்திரனும் அவரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். மருத்துவத்துறை பிரச்னையை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

ஊதியம் வேண்டாம் என CM சொல்வாரா?

image

தமிழக அரசின் நிதிநிலை சரியாகும் வரை எங்களுக்கு ஊதியம் வேண்டாம் என CM ஸ்டாலின், அவரது மினிஸ்டர்ஸ், MLAக்கள் அறிவிப்பார்களா? என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. நிதிநிலை மோசம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றும் உயர் அலுவலர்கள், அவர்களின் ஊதியத்திலிருந்து 10% விட்டுக் கொடுப்பார்களா? எனவும் அந்த சங்கம் வினவியுள்ளது.

News November 10, 2024

ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவராக்க தயார்: TNGEA

image

CM ஸ்டாலினை 2026இல் எதிர்க்கட்சி தலைவராக்க தயார் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் பகிரங்கமாக தெரிவித்துள்ளது. ஆட்சியில் அமர்த்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகளை பறித்ததுதான் திமுகவின் 3 ஆண்டு சாதனை என குற்றஞ்சாட்டிய சங்கம், எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் தான், ஸ்டாலின் தங்களை சந்திப்பார் என விமர்சித்துள்ளது. OLD பென்ஷன் ஸ்கீமை அமல்படுத்த வலியுறுத்தி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News November 10, 2024

உணவே மருந்து! மருந்தே உணவு!!

image

*தினம் ஒரு கோவைப்பழம் சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.
*தினம் ஒரு இலந்தைப்பழம் – நெஞ்சுவலிக்கு தீர்வு
*தினம் 2 துண்டு அன்னாசி சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
*தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.
*தூங்கும்முன் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால் குடல் புழுக்கள் அழியும்.

News November 10, 2024

பிரியங்காவுக்கு ஆதரவாக களமிறங்கிய வினேஷ் போகத்

image

வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை ஆதரித்து, வினேஷ் போகத் பிரசாரத்தில் ஈடுபட்டார். முன்னாள் மல்யுத்த வீராங்கனையான அவர், ஒலிம்பிக்ஸ் ஃபைனல்ஸில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஓய்வை அறிவித்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். அதன்பிறகு ஹரியானா MLA தேர்தலில் வெற்றி பெற்ற அவர், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

News November 10, 2024

இதுக்கெல்லாம் இவர்கள்தான் தந்தை!

image

*வரலாற்றின் தந்தை – ஹெரடோடஸ்
*புவியியலின் தந்தை – தாலமி
*இயற்பியலின் தந்தை – நியூட்டன்
*கணிப்பொறியின் தந்தை – சார்லஸ் பாபேஜ்
*தாவரவியலின் தந்தை – தியோபிராச்டஸ்
*விலங்கியலின் தந்தை – அரிஸ்டாட்டில்
*பொருளாதாரத்தின் தந்தை – ஆடம் ஸ்மித்
*சமூகவியலின் தந்தை – அகஸ்டஸ் காம்தே
*மரபியலின் தந்தை – கிரிகர் கோகன் மெண்டல்
*நவீன மரபியலின் தந்தை – T.H.மார்கன்

News November 10, 2024

வேல்குமார், பரசுராம்.. லெஜண்ட்ஸ் எண்ட்ரீ!

image

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் டிராகன். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் கதாபாத்திர விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வேல்குமாராக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும், பரசுராமாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

News November 10, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்
▶அதிகாரம்: வினைத்திட்பம்
▶குறள் இயல்: அமைச்சியல் ▶குறள் எண்: 661
▶குறள் :
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
▶விளக்க உரை: மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.

News November 10, 2024

இரவில் நகம், முடி வெட்டக்கூடாது.. ஏன்?

image

இரவில் நகம், முடி வெட்டக்கூடாது எனக் கூறப்படுவதுண்டு. இது சாஸ்திரமோ, சம்பிரதாயமோ இல்லை. முற்காலத்தில் மின்சார வசதி இல்லாததால் நகம், முடியை இரவில் வெட்டினால் எங்காவது விழுந்துவிடும். குறிப்பாக உணவு போன்றவற்றில் விழுந்தால், கண்ணுக்கு தெரியாது. அதை சாப்பிட்டால் உடல் உபாதை ஏற்படும். இதனை தவிர்க்கவே நம் முன்னோர்கள் இரவு நேரத்தில் நகம், முடி வெட்டினால் குடும்பத்திற்கு ஆகாது எனக் கிளப்பிவிட்டுள்ளனர்.

error: Content is protected !!