News November 10, 2024
இரவில் நகம், முடி வெட்டக்கூடாது.. ஏன்?

இரவில் நகம், முடி வெட்டக்கூடாது எனக் கூறப்படுவதுண்டு. இது சாஸ்திரமோ, சம்பிரதாயமோ இல்லை. முற்காலத்தில் மின்சார வசதி இல்லாததால் நகம், முடியை இரவில் வெட்டினால் எங்காவது விழுந்துவிடும். குறிப்பாக உணவு போன்றவற்றில் விழுந்தால், கண்ணுக்கு தெரியாது. அதை சாப்பிட்டால் உடல் உபாதை ஏற்படும். இதனை தவிர்க்கவே நம் முன்னோர்கள் இரவு நேரத்தில் நகம், முடி வெட்டினால் குடும்பத்திற்கு ஆகாது எனக் கிளப்பிவிட்டுள்ளனர்.
Similar News
News November 14, 2025
சற்றுமுன்: 150 இடங்களில் NDA கூட்டணி முன்னிலை

பிஹாரில் ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில், NDA 150 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. BJP – 87, JDU – 60, LJP (RV) 2, HAM 2 என மொத்தம் NDA கூட்டணி 144 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், RJD 69, CONG 9, CPL (ML) 5, VIP 1 இடங்கள் என மொத்தம் 84 இடங்களில் மட்டுமே MGB முன்னிலை பெற்றுள்ளது.
News November 14, 2025
மதவாதம் இருக்குமிடத்தில் EPS இருக்க மாட்டார்: KTR

EPS இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது, மதவாதம் இருக்கும் இடத்தில் EPS இருக்க மாட்டார் என்று KT ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மதவாத சக்தியோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக திமுக உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாஜக உடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 14, 2025
முன்னிலை வகிக்கும் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர்கள்

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். ➤தாராபூர் தொகுதி: DCM சாம்ராட் சவுத்ரி முன்னிலை ➤அலிநகர் தொகுதி: பாடகி மைதிலி தாக்குர் முன்னிலை ➤லக்கிசராய் தொகுதி: DCM விஜய் குமார் சின்ஹா முன்னிலை ➤கதிஹார் தொகுதி: முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜக வேட்பாளருமான தர்கிஷோர் பிரசாத் முன்னிலை வகித்து வருகிறார்.


