India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழை, குளிர் காலங்களில் காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகள் வருவது சகஜம். ஆனால், இந்த காலங்களில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், இதய நோயாளிகள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக அதிகாலையில் வாக்கிங், ஜாகிங் செல்வதை தவிர்ப்பதோடு, குளிர்ந்த நீரில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
நடிகை ரம்யா பாண்டியனின் ஹனிமூன் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆண் தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன். கடந்த 8ஆம் தேதி தனது காதலன் லோவல் தவானை திருமணம் செய்துகொண்டார். தற்போது இருவரும் ரிஷிகேஷில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் ‘என்ஜாய் ரம்யா’ என வாழ்த்தி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் கேன் போடும் இளைஞர் ஒருவர் சிறுமியை வன்கொடுமை செய்ததாக பெற்றோர் புகார் தெரிவித்திருந்த நிலையில், இதை தானாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிரான காவல்துறை மனுவை விசாரித்த SC, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 7-ல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து டைட்டிலை வென்றவர் அர்ச்சனா. சின்னத்திரையில் நடித்து வந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெள்ளித் திரையில் பிஸியாகி விட்டார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சோலோவாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். Happy birthday Archana..
கூல் ட்ரிங்ஸ் எனப்படும் காஃபின் கலந்த சோடா பானங்களைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அடிக்கடி இந்த Caffeinated சோடா கொண்ட குளிர்பானங்களை எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்குப் ஞாபக மறதி, மது அருந்தும் எண்ணங்கள், உடல் பருமன், வகை 2 சர்க்கரை நோய் போன்ற கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு அல்லவா..
ராஜஸ்தானில் புஷ்கர் விழாவையொட்டி நடந்த கால்நடை ஏலத்தில் ஒரு எருமை ரூ.23 கோடிக்கு ஏலம் போயுள்ளது. 5 அடி உயரம், 13 அடி நீளம் கொண்ட இந்த எருமை 1,500 கிலோ எடை கொண்டது. அன்மோல்(8) என்ற அந்த எருமையை ஜக்தர் சிங் என்பவர் வளர்த்து வருகிறார். இந்த எருமையின் விந்து விற்பனை மூலம் பல லட்சம் பணம் சம்பாதித்துள்ள ஜக்தர், பிள்ளையைப் போல் வளர்ப்பதாகக் கூறி எருமையை ஏலத்தில் விற்க மறுத்துவிட்டார்.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்றும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்றிரவு, நாளை காலையில் கனமழை பெய்யத் தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் இந்திரா செளந்தர ராஜன் உடலுக்கு நடிகர் சந்தானம் நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மர்ம தேசம், விடாது கருப்பு உள்ளிட்ட மர்ம நாவல்களை எழுதியவர் இந்திரா செளந்தரராஜன். மதுரையில் உள்ள வீட்டில் நேற்று குளியலறையில் கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து கேள்விப்பட்டு மதுரையில் உள்ள வீட்டிற்கு சென்று அவருடைய வாசகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும், சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் அமெரிக்காவின் லெவோண் அரோனியனை வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழகத்தின் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.7 சுற்றுகள் கொண்ட தொடரில் 4 வெற்றி, 3 டிரா என 5.5 புள்ளிகளைப் பெற்று பிரணவ் வென்றார்.
திருச்செந்தூரில் தனியார்ப் பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு பெற்றோர் மறியல் போராட்டம் நடத்திய நிலையில், கோவையில் தலைமறைவாக இருந்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.