India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கர்நாடகாவில் OBC-களுக்கான இடஒதுக்கீட்டை 31%-லிருந்து 51%ஆக அதிகரிக்க பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முஸ்லீம்களை OBC பட்டியலில் சேர்க்கவும், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 4%லிருந்து 8%ஆக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, அம்மாநில அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
▶ஏப்ரல் – சித்திரை- 01 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7 :30 PM – 9:00 PM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶ திதி: சுன்யதிதி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶ பிறை: தேய்பிறை
ராமதாஸ்-க்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதால் அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சைதை துரைசாமி சந்தித்து பேசியுள்ளார். அன்புமணி தூது அனுப்பினாரா அல்லது பாஜக உடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசினாரா என தெரியவில்லை. அண்மையில் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஏப்ரல் 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
2017-ல் பிரபல நடிகை காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை மே 21-ல் நடைபெறும் என கோர்ட் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் திலீப் கைதாகி 3 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு தற்போது முடிவுக்கு வருகிறது. இறுதி விசாரணை நாளில் பாதிக்கப்பட்டவர், எதிர்தரப்பினர் வாதங்களை முன்வைத்தால் தீர்ப்பு மற்றொரு நாளில் வழங்கப்படும்.
அதிமுக-பாஜக கூட்டணியை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பொருந்தாக் கூட்டணி என்று விமர்சிக்கின்றன. இதற்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக, பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என திமுக ஏஜென்டுகள் விமர்சிப்பதாகவும், ஆனால் உண்மையில் இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான் என்றும் கூறியுள்ளார். திமுக அரசை ஆட்சியை விட்டு அகற்றப் போகும் கூட்டணியும் இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
PM ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக 2.72 கோடி வீடுகள் கட்டித் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிராமங்களில் 3.79 கோடி புதிய வீடுகள் கட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி கிராமங்களில் புதிதாக 2.72 கோடி புதிய வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 72% முடிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சேமிப்புகள் மீதான வட்டியை HDFC குறைத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான HDFC, சேமிப்புகள் மீதான வட்டியை 2.75%ஆக குறைத்துள்ளது. இது அடிப்படை 25 புள்ளிகள் குறைவாகும். முன்னணி தனியார் வங்கிகளான ICICI, AXIS ஆகியவை சேமிப்புகள் மீது 3% வட்டியை அளிக்கின்றன. அதனுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். இதேபோல், கொரோனா காலத்தில் 2020-ல் வட்டியில் அடிப்படை 25 புள்ளிகளை குறைத்தது.
➤மேஷம் – நற்செயல் ➤ரிஷபம் – விருத்தி ➤மிதுனம் – நலம் ➤கடகம் – ஜெயம் ➤சிம்மம் – இரக்கம் ➤கன்னி – சாந்தம் ➤துலாம் – லாபம் ➤விருச்சிகம் – தொல்லை ➤தனுசு – வரவு ➤மகரம் – நஷ்டம்➤கும்பம் – சிரமம் ➤மீனம் – நலம்.
தேனியில் திருமணமான 4 மாதத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு இது 3-வது திருமணமாம். திருமணத்தின்போதே கர்ப்பமாக இருந்த அவர், உண்மையை மறைத்துள்ளார். கணவனுக்கு விஷயம் தெரிந்ததை அடுத்து அந்த பெண் வீட்டில் இருந்து மாயமானார். கணவன் கொடுத்த புகாரில் அந்த பெண்ணை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். தற்போது கைக்குழந்தையுடன் இருக்கும் அவர் கணவனுடன் வாழ விருப்பமில்லை என கூறிவிட்டாராம்.
Sorry, no posts matched your criteria.