News April 14, 2025

கர்நாடகாவில் OBC இடஒதுக்கீடு உயர்வு?

image

கர்நாடகாவில் OBC-களுக்கான இடஒதுக்கீட்டை 31%-லிருந்து 51%ஆக அதிகரிக்க பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முஸ்லீம்களை OBC பட்டியலில் சேர்க்கவும், அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 4%லிருந்து 8%ஆக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, அம்மாநில அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News July 6, 2025

வேற லெவல்… அஜித் அப்படியே இருக்காரே..

image

கார் பந்தயத்தில் தீவிர ஆர்வம் கொண்ட நடிகர் அஜித், ‘ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ மற்றும் F1 படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைத்தால் நிச்சயம் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். பந்தயங்களில் பங்கேற்றாலும், முழுநீள ரேஸ் படத்தில் நடிக்காத அஜித்தின் இந்த ஆசை ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் எடிட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

News July 6, 2025

₹8,000 கோடியில் புதிய கன்டெய்னர் துறைமுகம்

image

சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் 2 கிமீ தூரத்துக்கு புதிய கன்டெய்னர் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடந்து வருவதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார். இது ₹8,000 கோடியில் அமைக்கப்படவுள்ளது என்றும், சரக்கு வாகனங்கள் நிறுத்தம், கப்பல் பழுதுபார்ப்பு நிலையம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாகவும் கூறினார். இதன்மூலம் கூடுதலாக சரக்குகளைக் கையாள முடியும் என்றார்.

News July 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 388 ▶குறள்: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். ▶பொருள்: நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.

error: Content is protected !!