news

News November 18, 2024

டி20: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இன்று மோதல்

image

AUS- PAK அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் டி20 போட்டியில் AUS வென்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடைசிப் போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற AUS தீவிரம் காட்டும் நிலையில், ஆறுதல் வெற்றியை பெற PAK முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 18, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் -18 ▶கார்த்திகை – 03 ▶கிழமை: திங்கள்
▶நல்ல நேரம்: 06:15 AM – 07:15 AM & 04:45 PM – 05:45
▶கெளரி நேரம்: 09:15 AM – 10:15 AM & 07:30 PM – 08:30PM
▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM
▶எமகண்டம்: 10:30 AM – 12:00 AM
▶குளிகை: 01:30 AM – 03:00 AM
▶திதி: திரிதியை ▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர்
▶ சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

News November 18, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

அனிருத்துடன் கீர்த்தி சுரேஷ் திருமணமா?

image

நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிருத் டிசம்பர் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் கீர்த்தி சுரேஷ், அரசியல்வாதி ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பும் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் பிறகு அது வதந்தி என்பது தெரிந்தது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து தற்போது புதுத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை கீர்த்தியின் தந்தை மறுத்துள்ளார்.

News November 18, 2024

ராசி பலன்கள் (18-11-2024)

image

➤மேஷம் – நன்மை
➤ரிஷபம் – பயம்
➤மிதுனம் – வெற்றி
➤கடகம் – கவலை
➤சிம்மம் – வரவு
➤கன்னி – துன்பம்
➤துலாம் – உறுதி
➤விருச்சிகம் – வீம்பு
➤தனுசு – பெருமை ➤மகரம்- செலவு
➤கும்பம் – ஆசை ➤மீனம் – ஆக்கம்

News November 18, 2024

12 லட்சம் புதிய மீட்டர்களுக்கு TNEB ஆர்டர்

image

12 லட்சம் சிங்கிள் பேஸ் மீட்டர்களுக்கு TNEB ஆர்டர் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய வீடுகள், கட்டிடங்களுக்கான மீட்டர்கள், பழுதான மீட்டர்களுக்கு பதிந்தும் புதிய மீட்டர்கள் பொருத்தப் படாமல் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் 6 தனியார் நிறுவனங்களிடம் புதிய மீட்டர்கள் வாங்குவது தொடர்பாக TNEB ஆர்டர் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

News November 18, 2024

₹8 லட்சத்தில் இருந்து ₹23,567 கோடி வரை..!

image

Mobikwik நிறுவனத்தின் நிறுவனர் பிபின் ப்ரீத் சிங்கின் வெற்றிக்கதை ஊக்கமளிப்பதாக உள்ளது. டெல்லி IIT-யில் படித்த அவர், டிஜிட்டலில் பணம் செலுத்தும் ட்ரெண்டை 2000 ஆம் ஆண்டிலேயே கணித்தார். 9 ஆண்டுகளாக சேர்த்த ₹8 லட்சத்தைக் கொண்டு, சிறிய அறையில் Mobikwik நிறுவனத்தை தொடங்கினார். அவருடைய மனைவி உபாசனா அவருக்கு உறுதுணையாக இருந்தார். தற்போது 10 கோடி பயனர்களுடன், ₹23,567 கோடியாக சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

News November 18, 2024

டெல்லியில் நாளை முதல் தீவிர கட்டுப்பாடுகள் அமல்

image

டெல்லியில் காற்று மாசுபாடு அதிதீவிர நிலைக்குச் சென்றதால், நாளை முதல் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை, 10, 12ஆம் வகுப்புகளை தவிர மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார், அரசு ஊழியர்களில் 50% பேருக்கு Work from Home வழங்குதல், தேவையின்றி கனரக வாகனங்கள் நுழைய தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலாகிறது.

error: Content is protected !!