News November 18, 2024
டெல்லியில் நாளை முதல் தீவிர கட்டுப்பாடுகள் அமல்

டெல்லியில் காற்று மாசுபாடு அதிதீவிர நிலைக்குச் சென்றதால், நாளை முதல் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை, 10, 12ஆம் வகுப்புகளை தவிர மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார், அரசு ஊழியர்களில் 50% பேருக்கு Work from Home வழங்குதல், தேவையின்றி கனரக வாகனங்கள் நுழைய தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலாகிறது.
Similar News
News December 13, 2025
வேட்பாளர் நேர்காணல்.. விஜய் பக்கா பிளான்

தை பொங்கலுக்கு வேட்பாளர் தேர்வு நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனெவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை தயார் செய்து, தொகுதிக்கு 4 பேர் வீதம் தேர்வு செய்து வைத்துள்ளாராம். அதில் 60% மாவட்ட செயலாளர்களுக்கு, பெண்களுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மீதமுள்ள 40% தொகுதிகள் பிரபலங்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தவெகவினர் கூறுகின்றனர்.
News December 13, 2025
அதிக சம்பளம் வாங்கிய ஹீரோக்கள்

2025-ம் ஆண்டு அஜித், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகின. இந்தாண்டு, ஒருபடத்துக்கு அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்று தெரியுமா? இதுதொடர்பான தகவலை மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 13, 2025
G.R.சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய EX நீதிபதிகள்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி G.R.சுவாமிநாதனுக்கு ஆதரவாக, EX நீதிபதிகள் 56 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், INDIA கூட்டணி பதவிநீக்க நோட்டீஸ் கொடுத்தது கண்டிக்கத்தக்கது. இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் சித்தாந்த, அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத நீதிபதிகளை அச்சுறுத்தும் முயற்சி. பதவிநீக்க நோட்டீஸை அரசியல் பழிவாங்கும் கருவியாக பயன்படுத்த கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


