news

News October 17, 2024

தமிழ் சினிமாவின் கலாச்சாரத்தை மாற்றிய VP

image

இயக்குநர் வெங்கட் பிரபு மட்டும் தான் தனது உதவி இயக்குநர்களுக்கு தினப்படியுடன் சேர்த்து மாத சம்பளத்தை கரெக்டாக வழங்கி வருகிறார். இதை அவரது சகோதரர் பிரேம்ஜி உறுதி செய்துள்ளார். 75 ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் வேறு எந்த இயக்குநரும் இதுபோல தொடர்ந்து செய்ததில்லை என நெட்டிசன்கள் VP-ஐ புகழ்ந்து வருகின்றனர். உணவுக்கும், வீட்டு வாடகைக்கும் கஷ்டப்படும் உதவி இயக்குநர்கள் இன்று வரையிலும் உள்ளனர்.

News October 17, 2024

இந்திய அணிக்கு அடிமேல் அடி

image

நியூசி., அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 46 ரன்களில் சுருண்ட இந்திய அணிக்கு மேலும் ஒரு அடி விழுந்துள்ளது. கீப்பிங்கின் போது ரிஷப் பண்ட்டின் கால் மூட்டில் பந்து தாக்க, வலியில் துடித்த பண்ட், தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார். அவருக்கு பதிலாக ஜூரல் கீப்பிங் செய்து வருகிறார். பேட்டிங்கில் தடுமாறும் இந்தியாவுக்கு, ஃபார்மில் இருக்கும் பண்ட் இல்லாதது பெரிய இழப்பாகும்.

News October 17, 2024

தமிழக ஆளுநருக்கு ஐகோர்ட் ‘செக்’!

image

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஐகோர்ட் கடிவாளம் போட்டுள்ளது. நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க, தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இதனை ஆளுநர் ரவி நிராகரித்தார். இந்த வழக்கு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர்தான் ஆளுநர் எனத் தெரிவித்த நீதிபதி, கைதிகளை விடுவிக்கும் மனுவை மீண்டும் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தினார்.

News October 17, 2024

ஆண்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும்!

image

குழந்தை பிறந்த பின்னர், தந்தையர்களில் 10இல் ஒருவர் கவலை, மனச்சோர்வுக்கு ஆளாவதாக மெட்டா – NYT ஆய்வில் தெரியவந்துள்ளது. 2 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தி, வல்லுநர்கள் அளித்த அறிக்கையில், குழந்தை கரு கொண்டதில் தொடங்கி 6 வயது வரை பெண்களைவிட ஆண்களுக்கு அதிக மன அழுத்தம், பதற்றம் ஏற்படுகிறது. குழந்தையின் நலன், எதிர்காலம் குறித்த சிந்தனையால் மன ரீதியாக ஆண் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2024

பாராட்டை சிலரால் தாங்க முடியவில்லை: ஸ்டாலின்

image

சென்னையில் எப்போது மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மழை சீரமைப்புப் பணிகளை அரசியலாக்க விரும்பவில்லை என்றும், அரசுக்கு வரும் பாராட்டுகளை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சிக்கிறார்கள் எனவும் சாடினார். சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் அரசை பாராட்டுவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

IND Vs NZ டெஸ்ட்: வலுவான நிலையில் நியூசி அணி

image

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசி அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 180/3 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கான்வே அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 22, மிட்சல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு சுருண்ட நிலையில், நியூசி வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது, இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

News October 17, 2024

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்?

image

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு போலி வேஷம் போடுவது அறவே பிடிக்காது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எப்போதும் சிந்தனையில் மூழ்கியிருப்பீர்கள். எழுத்துத் துறையில் ஆர்வம், தன்னடக்கம், அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம், அமைதியை விரும்பும் மனம் கொண்டிருப்பீர்கள் என்று நந்தி வாக்கியம் உங்களைப் பற்றிக் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 17, 2024

‘கொலுசு’ பின்னணியில் இப்படி ஒரு விஷயமிருக்கா?

image

சங்க காலந்தொட்டு காலில் வெள்ளி கொலுசு (சிலம்பு, தண்டம்) அணிவதை தமிழக பெண்கள் பின்பற்றி வருகின்றனர். இவ்வாறு அதை அணிவதன் பின்னணியில் என்னதான் இருக்கிறது என கேட்கிறீர்களா? உங்களுக்கான பதில் இதோ. பொதுவாக ஆற்றலை மீண்டும் கிரகித்துக் கொள்ளும் தன்மை வெள்ளிக்கு உள்ளது. மனித உடலில் இருக்கும் ஆற்றலானது கை & கால்கள் வழியாகவே வெளியேறும். அதனால்தான் பெண்கள் கால்களில் வெள்ளி கொலுசுகளை அணிந்து வருகின்றனர்.

News October 17, 2024

மது விற்கும் அரசால் இது முடியாதா? ஹைகோர்ட் காட்டம்

image

தீபாவளியை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இதற்கு டெண்டர் விடுவது தொடர்பான வழக்கு, சென்னை ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மது விற்கும் தமிழக அரசால் பட்டாசுகளை விற்க முடியாதா? என நீதிபதி கேள்வியெழுப்பினார். அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், காரணமில்லாமல் அரசை குறை கூறினால் மவுனம் காக்க முடியாது” என்றார். பின்னர் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

News October 17, 2024

400 ரன்களா? 46 எடுக்கவே உயிர் போயிடுச்சே!

image

இரண்டு நாள்களுக்கு முன் பேட்டியளித்த இந்திய அணி கோச் கவுதம் கம்பீர், எங்கள் அணியில் இருக்கும் வீரர்களால் ஒரே நாளில் 400 முதல் 500 ரன்கள் அடிக்க முடியும் என்றார். அதனால் தானோ என்னவோ, நியூசி., பவுலர்கள் இன்று இந்திய பேட்ஸ்மென்களை கதறவிட்டனர். 50 ரன்கள் கூட தொட முடியாமல், அரைநாளில் 46 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனார்கள். மொதல்ல செய்யுங்க, அப்புறம் பெருமை பேசுங்க என்று கம்பீரை கலாய்க்கின்றனர் ரசிகர்கள்.

error: Content is protected !!