news

News October 18, 2024

காலை 4 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை

image

இன்று (அக்.18) காலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 18, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

தினம் ஒரு திருக்குறளை இந்த பகுதியில் படித்து வருகிறோம். அந்த வரிசையில், இன்றைய நாளுக்கான திருக்குறளை இங்கு நாம் காணலாம். ▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: மெய்யுணர்தல். ▶குறள் எண்: 351 ▶ குறள்: பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. ▶பொருள்: மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும். SHARE IT

News October 18, 2024

3 நாள்களுக்கு கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?

image

*இன்று: வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு *20ம்தேதி: ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கோவை, திருப்பூர் *21: ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கோவை, திருப்பூர். SHARE IT

News October 18, 2024

டெஸ்டில் இந்திய அணியின் குறைவான ஸ்கோர்கள்

image

டெஸ்டில் இந்திய அணி இதுவரை எடுத்த குறைவான ஸ்கோர்களை பார்க்கலாம்.
*1947- 58 ரன்கள் (எதிரணி- ஆஸி) *1952 – 58 ரன்கள் (எதிரணி- இங்கி) *1974- 42 ரன்கள் (எதிரணி- இங்கி) *1977- 83 ரன்கள் (எதிரணி- இங்கி) *1987- 75 ரன்கள் (எதிரணி- வெஸ்ட் இண்டீஸ்) *1999- 83 ரன்கள் (எதிரணி- நியூசிலாந்து) *2008 – 76 ரன்கள் (எதிரணி-தெ.ஆப்பிரிக்கா) *2020- 36 ரன்கள் (எதிரணி-ஆஸி) *2024- 46 ரன்கள் (எதிரணி- நியூசி)

News October 18, 2024

டி.டி தமிழில் ஹிந்தி கொண்டாட்டமா? S.P. காட்டம்

image

டி.டி. தமிழில் ஹிந்தி மாத கொண்டாட்டங்கள் நடந்ததற்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதிகை என்ற பெயரை டி.டி. தமிழ் என்று பெயர் மாற்றம் செய்து, அதன்மூலம் ஹிந்தி திணிப்பை மத்திய பாஜக அரசு மேற்காெண்டிருப்பதாக அவர் சாடியுள்ளார். தமிழ் மக்களின் உணர்ச்சிகளை சீண்டிப் பார்க்கும் செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News October 18, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக். 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News October 18, 2024

நடிகை தமன்னாவிடம் ED விசாரணை

image

நடிகை தமன்னாவிடம் ED அதிகாரிகள் விசாரணை நடத்தினர். HPZ Token செயலியில் முதலீடு செய்தோரிடம் பல கோடி மாேசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் மீது ED பணமோசடி வழக்குப்பதிந்துள்ளது. அந்த செயலி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தமன்னா கலந்து கொண்டதாகவும், பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கவுகாத்தியில் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

News October 18, 2024

7 நாளில் 1 சவரன் ₹1,080 உயர்வு

image

சவரன் தங்கம் விலை 7 நாளில் ₹1,080 உயர்ந்துள்ளது.
*அக்.10 = ₹ 7,025 (கிராம்), ₹56,200 (சவரன்)
*அக்.11 = ₹ 7,095 (கிராம்), ₹56,760 (சவரன்)
*அக்.12 = ₹7,120 (கிராம்), ₹56,960 (சவரன்)
*அக்.13 = மாற்றமில்லை
*அக்.14 = மாற்றமில்லை
*அக்.15 = ₹7,095 (கிராம்), ₹56,760 (சவரன்)
*அக்.16 = ₹ 7,140 (கிராம்), ₹57,120 (சவரன்)
*அக். 17 = ₹ 7,160 (கிராம்), ₹ 57,280 (சவரன்).

News October 18, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக். 18 (ஐப்பசி 1) ▶வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 2:00 AM – 3:00 AM & 6:30 PM – 7:30 PM▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶ திதி: திதித்துவம் ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு▶ பரிகாரம்: வெல்லம் ▶ நட்சத்திரம்: அசுபதி ▶சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம். SHARE பண்ணுங்க.

News October 18, 2024

மகாராஷ்டிரா தேர்தல்: 110 பாஜக வேட்பாளர்கள் ரெடி

image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 288 தொகுதிகளை உடைய அம்மாநிலத்தில் நவ.23இல் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ள பாஜக தலைமை 110 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 150 இடங்களில் போட்டியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

error: Content is protected !!