News November 20, 2024
சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு?

RBI கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலத்தை 2ஆவது முறையாக நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 25ஆவது கவர்னராக 2018ஆம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளில் பதவிக்காலம் நிறைவடைந்தாலும், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில், அவரது பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News December 16, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.16 ) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News December 16, 2025
சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு.. SC-ல் வழக்கு

நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி SC-ல் வழக்கு தொடர்ந்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து, நீதிபதி குறித்து திமுக ஆதரவு கட்சியினர் சட்டவிரோத போராட்டங்களை நடத்தி அவதூறு பரப்புவதாகவும், அவர்கள் மீது மாநில அரசும், போலீசும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
News December 16, 2025
IPL 2026 அப்டேட்

IPL 2026 தொடங்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. மார்ச் 15-ம் தேதி தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் முன்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது முதல் போட்டி மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்றும் இறுதிப் போட்டி மே 31-ம் தேதி நடைபெறும் என்றும் cricbuzz-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், IPL மினி ஏலம் நாளை அபுதாபியில் நடைபெற உள்ளது.


