news

News November 20, 2024

மகா விகாஸ் அகாதி VS மகாயுதி

image

மகாராஷ்டிரா தேர்தலின் கருத்துக்கணிப்பு (EXIT POLL) முடிவுகள் இன்னும் சில நிமிடங்களில் வெளியாக உள்ளன. மொத்தமுள்ள 288 இடங்களில் மெஜாரிட்டிக்கு குறைந்தது 145 இடங்கள் தேவை. பாஜக, குடியரசுக் கட்சி (அத்வாலே), சிவசேனா (ஷிண்டே), என்சிபி (அஜித் பவார்) இணைந்து மகாயுதி கூட்டணியாகவும், காங்., சிவசேனா (உத்தவ்), என்சிபி (சரத் பவார்), சமாஜ்வாதி இணைந்து மகா விகாஸ் அகாதி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

News November 20, 2024

பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்க: வாசன்

image

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தஞ்சை அருகே ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், முன்பின் தெரியாதவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும், இதுபோன்ற <<14659333>>சம்பவம் <<>>இனி நிகழாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

News November 20, 2024

IRFAN மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? EPS கேள்வி

image

Youtuber Irfan குழந்தையின் தொப்புள் கொடி அறுத்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். நடவடிக்கை எடுப்பேன் என முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த அமைச்சர் மா.சு, பின் Irfan உதயநிதியுடன் சாப்பிடும் VIDEO வெளியானதும், இது கொலைக்குற்றமா என பம்மி பதுங்குவதாக சாடினார். குழந்தை பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்காததையும் சுட்டிக்காட்டினார்.

News November 20, 2024

BREAKING: தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

image

தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கெனவே, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய வானிலை மையம் அதனை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் ஆக மாற்றி அறிவித்துள்ளது. தென் தமிழகத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

மகாராஷ்டிராவில் நடந்தது என்ன?

image

மகாராஷ்டிராவில் 2019-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் BJP+ சிவசேனா கூட்டணி மெஜாரிட்டி பெற்றாலும், அதிகாரப் போட்டியால் ஆட்சியமைப்பதில் இழுபறி ஏற்பட, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. பின் சரத்பவாரின் என்சிபி, காங்., சிவசேனா இணைந்து உத்தவ் தாக்கரேவை CM ஆக்கி கூட்டணி ஆட்சியமைத்தன. ஆனால், 2022-இல் சிவசேனா உடைய, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.

News November 20, 2024

2 மாநிலங்களில் அடுத்து யார் ஆட்சி? WAY2NEWSஇல் EXIT POLL

image

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைகளுக்கு இன்னும் சில நிமிடங்களில் வாக்குப்பதிவு நிறைவுபெறவுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட வாக்குகள் குறித்த தகவலை வைத்து, யார் அங்கு அடுத்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது என்ற EXIT POLL விவரத்தை WAY2NEWS வெளியிடவுள்ளது. இதை தெரிந்து கொள்ள WAY2NEWSஇல் தொடர்ந்து இணைந்திருங்கள்.

News November 20, 2024

10 நாட்களில் அண்ணாமலை ரிட்டன்ஸ்

image

பாஜக உயர்மட்டக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் லண்டனில் இருந்து காணொலி மூலம் பங்கேற்ற அண்ணாமலை, அதிமுக கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் சிலரின் கருத்துகளால் குழப்பம் ஏற்படுவதாக குறிப்பிட்டார். எனவே கூட்டணி தொடர்பாக யாரும் எவ்வித கருத்தும் கூறக்கூடாது என நிர்வாகிகளை அறிவுறுத்திய அவர், 10 நாள்களில் தமிழகம் திரும்பி, மீண்டும் கட்சிப்பணிகளை தீவிரமாக முன்னெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

News November 20, 2024

மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளிய ஜார்க்கண்ட்

image

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிக வசதிபடைத்த, முன்னேறிய மாநிலமான மகாராஷ்டிராவில் பெரும்பாலானோர் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. அதேநேரம் பழங்குடியினரும், கிராமப்புற மக்களும் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்டில் அதிகமானோர் வாக்களித்துள்ளனர். 3 மணி நிலவரப்படி JH 61%, MH 45% பேர் வாக்களித்துள்ளனர்.

News November 20, 2024

மகாராஷ்டிராவில் 45.53%, ஜார்கண்டில் 61% வாக்குப்பதிவு

image

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தலில் சற்றுமுன்பு வரை 45.53% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் 2ஆம் கட்டத் தேர்தலில் 61.47% வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து மாலை வரை தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த வாக்குகள் விகிதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை EC வெளியிடும்.

News November 20, 2024

BIG BREAKING: அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

image

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 16ஆம் தேதி தாெடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்ததும் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 1ஆம் தேதி அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும், அதன்பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்க.

error: Content is protected !!