News November 20, 2024
மகா விகாஸ் அகாதி VS மகாயுதி

மகாராஷ்டிரா தேர்தலின் கருத்துக்கணிப்பு (EXIT POLL) முடிவுகள் இன்னும் சில நிமிடங்களில் வெளியாக உள்ளன. மொத்தமுள்ள 288 இடங்களில் மெஜாரிட்டிக்கு குறைந்தது 145 இடங்கள் தேவை. பாஜக, குடியரசுக் கட்சி (அத்வாலே), சிவசேனா (ஷிண்டே), என்சிபி (அஜித் பவார்) இணைந்து மகாயுதி கூட்டணியாகவும், காங்., சிவசேனா (உத்தவ்), என்சிபி (சரத் பவார்), சமாஜ்வாதி இணைந்து மகா விகாஸ் அகாதி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.
Similar News
News November 7, 2025
அழகே பொறாமைப்படும் பேரழகுக்கு ஹேப்பி பர்த்டே!

நிஜத்தில் ராணிகள் இப்படிதான் இருந்திருப்பார்களோ என என்னும் வகையில் ரசிகர்களை வியக்க வைத்த ‘ஸ்வீட்டி’ அனுஷ்காவுக்கு இன்று ஹேப்பி பர்த்டே. அருந்ததி ஜக்கம்மாவாக, வானம் சரோஜாவாக, பாகுபலி தேவசேனாவாக நடிப்பில் மட்டும் மிரட்டாமல், தனது அழகாலும் திரையில் ஓவியமாக நின்றார். அனுஷ்கா நடித்ததில் உங்களுக்கு பிடித்த படத்தை கமெண்ட் பண்ணுங்க?
News November 7, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி நீக்கம்

செங்கோட்டையன் ஆதரவாளரான திருப்பூர் Ex MP சத்யபாமா உள்ளிட்ட 12 முக்கிய நிர்வாகிகளை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இபிஎஸ் நீக்கியுள்ளார். Ex MP சத்யபாமா, கடந்த 30-ம் தேதி செங்கோட்டையனுடன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சத்யபாமாவை ஏற்கெனவே மாவட்ட மகளிர் அணி பொறுப்பிலிருந்து EPS நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News November 7, 2025
இது என்னடா சீன அதிபருக்கு வந்த புது சோதனை!

தென் கொரியாவில் டிரம்பை சந்தித்தபோது சீன அதிபர் ஜி ஜின்பிங் சிரித்து பேசும் புகைப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டோ சீனாவில் வெளியாகாதாம். ஏனென்றால், போட்டோஸ் மற்றும் தகவல்களை பகிர்வதில் கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்திருப்பதால் அங்கு இது வெளியாகாது. ஆனால், சீன அதிபரின் இந்த மறுபக்கத்தை உலகம் தெரிந்துகொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகை இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.


