India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடற்பயிற்சி செய்வது நல்லதுதான் என்றாலும், அதற்கென நேரம், வரைமுறை இருப்பதாக இதய நல டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், அவசரத்தில் பயிற்சி செய்வதால் அட்ரிலின் சுரந்து பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவு, வெறும் 2 mm குறுக்களவு கொண்ட இதய ரத்தக்குழாய்களில் ஏதோ ஓர் இடத்தில் சிறிய கீறல் உண்டாகி ரத்த உறைவு ஏற்படுகிறது. அது முக்கிய குழாயில் ஏற்பட்டால் ஒருவர் இறந்துபோகக் கூடிய வாய்ப்புள்ளது என்கின்றனர்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற திருமாவளவனின் முழக்கத்தையே, தவெக மாநாட்டில் விஜய்யும் முன்வைத்திருந்தார். இதனை விசிகவினர் சிலரும் பாராட்டியதால் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், 2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா என திருமாவிடம் நிருபர்கள் இன்று கேட்டனர். அதற்கு, ‘பொறுத்திருந்து பாருங்கள்’ எனக் கூறி ட்விஸ்ட் வைத்தார் திருமா.
அனுமதியின்றி தியேட்டருக்குள் நுழையக் கூடாது என யூடியூபர்களுக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தியேட்டர் வாயிலில் ரசிகர்களிடம் யூடியூபர்கள் கருத்து கேட்கக் கூடாது என்றார். மீறி கருத்து கேட்கும்பட்சத்தில் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் சோலார் மின் ஒப்பந்தங்களைப் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி நிறுவனம் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கவுதம் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. குற்றப்பத்திரிகையில், ஆந்திர மாநில மின் விநியோக நிறுவன (DISCOMs)அதிகாரிகளுக்கு மே 2019 முதல் ஜூன் 2024 வரை சுமார் 1,750 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேங்காய் தண்ணீர் உடலுக்கு நன்மையை கொடுத்தாலும், அதனை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் தேவை என பிரபல டயட்டீஷியன் அல்கா கார்னிக் கூறுகிறார். அவரின் சில அறிவுறுத்தல்கள் வருமாறு, * வெறும் வயிற்றில் தேங்காய்த் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். இல்லையெனில், வயிற்று எரிச்சல், குமட்டல் ஏற்படலாம் * ஆரஞ்சு சாறு கலந்து குடிக்கலாம் * தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.
மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலத்தை இரண்டு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக தமிழக அரசு குறைத்துள்ளது. MD, MS உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாகக் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபட வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதால் இந்தியாவில் அதானி நிறுவன பங்குகளின் விலை கடும் சரிவைக் கண்டுள்ளன. இன்று ஒரே நாளில், அதானி நிறுவனங்கள் சுமார் 22 பில்லியன் டாலர் மதிப்பினை இழந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்திய ரூபாயின் மதிப்பில் ஒரு லட்சத்து, 85 ஆயிரம் கோடிகள் ஆகும். நீங்க அதானி பங்குகள் வைத்திருக்கிறீர்களா?
கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு கிராமத்துலயே ஒன்னு, இல்ல ரெண்டு டிவிதான் இருக்கும். நாம பக்கத்து வீட்டுல போய் உக்காந்து டிவி பார்த்திருப்போம். அப்ப எல்லாம் பிளாக் & வொய்ட் டிவி பார்க்குறது கூட சூப்பரா இருக்கும். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் டிவி நுழைய ஆரம்பிச்சுது. இப்போ, டிவி இல்லாத வீடே இல்ல. உங்க வீட்டுக்கு டிவி எப்போ வந்துச்சினு சொல்லுங்க. இன்று சர்வதேச டிவி தினம்.
அதானிக்கு அமெரிக்க கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பது ஏன் தெரியுமா? ₹ 16,000 கோடி சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெறுவதற்காக ₹ 2,000 கோடியை இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி தரப்பு வழங்கியதுதான் குற்றச்சாட்டு. ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க நிறுவனங்கள்தான் முதலீடு செய்கின்றன. எனவே, அமெரிக்க முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த வழக்கு நியூயார்க் கோர்ட்டில் பதிவானது.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் குடும்பத்தைச் சேர்ந்த சுஷாந்த் அனுமோலுவை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் வெளியான தகவலுக்கு நடிகை மீனாட்சி சவுத்ரி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அவர், இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகின்றன என புரியவில்லை, நான் யாரையும் காதலிக்கவில்லை அப்படி இருந்தால் நானே அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.