news

News October 19, 2024

பட்டத்தை தட்டி தூக்கிய தமிழக சிங்கப் பெண்கள்

image

மகளிர் யு19 டி20 தொடரின் இறுதிச்சுற்று போட்டியில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. முதலில் ஆடிய UP அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 67 ரன்கள் எடுத்தது. TN அணி சார்பில் ஜான்லின் சந்திரா 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் ஆடிய TN அணி 19.1 ஓவர்களில் 68/6 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Congratulations Team TN.

News October 19, 2024

“Vamos Brincar Babe…” பாடல் அக். 21 ரிலீஸ்

image

‘கங்குவா’ படத்தின் 2ஆவது பாடலான “Vamos Brincar Babe…” என்ற பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், மிகப்பெரிய பொருட்செலவில் பல்வேறு மொழிகளில் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக, சென்னையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நாளை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

News October 19, 2024

இங்கெல்லாம் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் காலை 10 மணி வரை 21 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தி.மலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது.

News October 19, 2024

சனிதோஷம் விலக இதை செய்யுங்கள்…

image

சனிக்கிழமை மேற்கொள்ளும் வழிபாடு சனிதோஷத்தை போக்கும் என ஆன்மிகம் சொல்கிறது. அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம். 1) சனிக்கிழமை விரதம் இருந்து காக்கை, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கலாம். 2) எள்ளை சுத்தம் செய்து வறுத்து, வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து திலசூரணம் செய்து பெருமாளுக்கு படைத்து வழிபடலாம். 3) சனிபகவான் சன்னதியில் தேங்காயில் எள் முடிச்சுட்டு தீபமேற்றி வழிபடலாம். SHARE IT

News October 19, 2024

திருமண தோஷங்கள் நீக்கும் கம்பா நதி காமாட்சி

image

நெல்லை டவுன் பேட்டையில் கம்பா நதி காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் இப்பகுதியில் கம்பா நதி ஓடியதாம். அந்த நதியின் கரையில், சுவாமியைத் திருமணம் செய்ய வேண்டி காந்திமதி அம்பாள் தவமிருந்தார். அப்போது அவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் மணம் புரிய அழைத்துச் சென்றதாக புராணம் கூறுகிறது. ஆதலால், இங்கு வழிபாடு நடத்தினால் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

News October 19, 2024

நைஜீரியா டேங்கர் லாரி தீ விபத்து: பலி 170ஆக அதிகரிப்பு

image

நைஜீரியாவில் டேங்கர் லாரி தீப்பிடித்து வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது. ஜிகாவா மாகாணத்தில் பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி 16ஆம் தேதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. லாரியில் இருந்து கீழே கொட்டிய பெட்ரோலை அப்பகுதி மக்கள், ஓடி வந்து கேன்களில் சேகரித்தனர். அப்போது தீப்பிடித்து லாரி வெடித்து சிதறியது. இதில் 170 பேர் பலியாகினர். 70 பேர் காயமடைந்தனர்.

News October 19, 2024

உதயநிதிக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு

image

அரசு நிகழ்ச்சியில் துணை CM உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம், டீ ஷர்ட் அணிந்து வர எதிர்ப்புத் தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அதில், அரசு நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் பங்கேற்கையில் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்த தடை இருப்பதாக கூறியுள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

News October 19, 2024

நாளையே கடைசி: ரயில்வேயில் 3,445 காலியிடங்கள்

image

ரயில்வேயில் 3,445 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே (அக்.20) கடைசி நாளாகும். டிக்கெட் கிளார்க், அக்கவுண்ட் கிளார்க், ஜூனியர் கிளார்க், ட்ரெயின் கிளார்க் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு செப்.21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு: 18 – 33 வரை ஆகும். SHARE IT.

News October 19, 2024

இந்தியா முழுவதும் பயணிக்க BH சீரிஸ் நம்பர் பிளேட்

image

ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் குடியேறுகையில் வாகனத்தை மறுப்பதிவு செய்யாமல், பழைய பதிவு எண்ணிலேயே ஓட்ட முடியும். இதற்கு அந்த வாகனத்திற்கு BH சீரிஸ் நம்பர் பிளேட் வாங்கியிருக்க வேண்டும். இந்த நம்பர் பிளேட் அனைவருக்கும் தரப்படாது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பாதுகாப்பு துறையினர், வங்கி ஊழியர்கள், 4 மாநிலத்திற்கு மேல் அலுவலகம் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்கே தரப்படும்.

News October 19, 2024

அதிமுகவினருக்கு ஓபிஎஸ் அழைப்பு

image

அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க உறுதி ஏற்போம் என அக்கட்சியினருக்கு முன்னாள் CM ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்றிட, 2026 தேர்தலில் இணைந்து களப் பணியாற்றி கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்போம் எனக் கூறியுள்ளார்.

error: Content is protected !!