India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திகிலூட்டும் காட்சிகளால் உலகளவில் ஃபேமஸ் ஆன Horror படங்கள் OTT தளங்களில் குவிந்து கிடக்கின்றன. ‘Conjuring’, ‘Saw’ படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் வானின் படுபயங்கர படமான ‘Insidious’-ஐ அமேசான் பிரைமில் காணலாம். ‘Jhon Wick’ நாயகன் கியானு ரீவ்ஸ் நடித்த ஹாரர் + ஆக்ஷன் படமான ‘Constantine’ நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் + ஹாரர் படமான ‘Hereditary’-ஐ அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள Digital Marketing , Event Manager உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.20) கடைசி நாளாகும். இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் tamilnadutourism.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பதவியை பொறுத்து ஊதியம் ₹20,000 முதல் ₹1,00,000 வரை வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு <
நடிகர் விஜய் தொடங்கியுள்ள TVK கட்சியின் முதல் மாநாட்டுக்காக 5 Entry, 15 Exit, பார்க்கிங் முதல் மாநாடு திடல் வரை 500+ CCTV, Zone வாரியாக பிரித்து, அங்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. காணாமல் போவோர் மற்றும் உடைமைகளை கண்டுபிடிக்க Missing Zone, 150+ மருத்துவர்கள், கழிவறை, மாநாட்டைக் கண்காணிக்க தனிக்குழு போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி மாநாடு நடைபெறவுள்ளது.
பிறந்த நாளை முன்னிட்டு (செப்.28) ஆதரவாளர்களுக்கு அமைச்சர் நாசர் நூதன கோரிக்கை விடுத்துள்ளார். பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுகிறேன் என ஆதரவாளர்கள் யாரும் வீடியோ, போட்டோ என எதையும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் எனவும், தன்னை மீண்டும் குளோஸ் பண்ண பாக்காதீங்க என்றும் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஒருமுறை அமைச்சர் பதவி பறிபோன நிலையில், சில நாள்கள் முன்புதான் அவர் மீண்டும் அமைச்சரானார்.
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மிகச்சிறந்த மனிதர் என நடிகை பூமிகா தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி கோபப்பட்டு பார்த்ததே இல்லை என்றும், பழகுவதற்கு அவரை போல் நல்ல மனிதர் யாரும் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார். தற்போது 90% இளைஞர்கள் செல்போனில் தான் அதிகம் அரட்டை அடிக்கிறார்கள், ஜெயம் ரவி அப்படி இருக்க மாட்டார், வாழ்க்கை துணை தப்பா இருந்தால் எதுவும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருவதாக தமிழிசையை உதயநிதி சாடியுள்ளார். மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் -ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. இந்திக்கு அக்கா வக்காலத்து வாங்குவதை மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு பிஎஸ்பி கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால், அங்கீகரிக்கப்பட்ட பிஎஸ்பியின் சின்னமாக யானை உள்ளது. எனவே, இந்த நோட்டீஸை சட்டமுறை அறிவிப்பாக கருதி, தவெக கொடியில் இருக்கும் யானை சின்னத்தை நீக்க வேண்டும். 5 நாட்களில் சின்னத்தை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்களால் விமான நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு போலி மிரட்டல்களாலும் ₹3 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. எரிபொருளுக்காக ₹1 கோடி செலவாகின்றது எனவும், விமான நிலைய அனுமதி, தங்கும் இடம், உணவு மற்றும் பயணிகளின் இதர தேவைகளுக்கு ₹2 கோடி ஆவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 40 போலி மிரட்டல்கள் மூலம் ₹80 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
2018ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது முதல், 90 ரன்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் இதுவரை 7 முறை சதத்தை தவறவிட்டுள்ளார். 2018ல் WI எதிரான 2 போட்டிகளில் 92 ரன்களில் அவுட் ஆனார். 2021ல் AUS உடன் 97 ரன்களிலும், ENG உடன் 91 ரன்களிலும் வெளியேறினார். அதேபோல், 2022ல் SL உடன் 96, BAN உடன் 93 ரன்களில் அவுட் ஆனார். மேலும், NZ-க்கு எதிரான இன்றைய 4ஆவது நாள் ஆட்டத்திலும் 99 ரன்களில் வெளியேறினார்.
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இருவருமே ஆஜராகாததால், வழக்கு விசாரணை நவ.2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோதும் இருவரும் ஆஜராகவில்லை.
Sorry, no posts matched your criteria.