India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடைபெற்று வரும் BGT முதல் டெஸ்டில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால், படிக்கல் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினார்கள். இதன் மூலம், இந்த வருடத்தில் அதிக டக் அவுட்டுகளை (33) கொண்ட அணி என்ற மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. பும்ரா 5 முறையும், கில், சர்ஃபராஸ், சிராஜ் தலா = 3 முறையும் டக் அவுட்டாகி உள்ளனர். இப்பட்டியலில் இங்கிலாந்து (25), வங்கதேசம் (19), தென்னாப்பிரிக்கா (18) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சென்னை பட்டாபிராமில் ரூ.297 கோடி மதிப்பீட்டில் 21 மாடிகளைக் கொண்டு டைடல் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 24 நேரமும் கண்காணிப்பு வசதி, அரங்கம், ஜிம், மருத்துவ மையம் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. 13 மற்றும் 16-வது மாடிகளுக்கு இடையே தொங்கும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டைடல் பார்க் மூலம் சுமார் 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ஷாலினியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த லெக்சஸ் காரை நடிகரும், அவரது கணவருமான அஜித் பரிசாக வழங்கியுள்ளார். கார், பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித். தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஷூட்டிங்கிற்கு இடையே கார் ரேஸில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி 44வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷாலினிக்கு வெளிநாட்டில் உள்ள அஜித் ரூ.69 லட்சம் மதிப்பிலான காரை கிப்ட் கொடுத்துள்ளார்.
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் பெற்ற மகளை (13) தந்தையே பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அச்சிறுமியின் பெரியப்பா மகனும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. “தந்தையும் அண்ணனும் தானே? விட்டுடு மா” என்று போலீசே இந்த விவகாரத்தை பஞ்சாயத்து பேசி முடித்து வைத்திருப்பதுதான் உச்சபட்ச கொடுமை. இவங்களை எல்லாம் என்ன செய்யறது மக்களே?
தவெக மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் ஜனவரி மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கருத்து கேட்டு வருகிறார். தமிழகம் முழுவதும் மா.செக்கள் 100 பேர், அமைப்பாளர்கள், பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
‘ஹலோ’ – இந்த வார்த்தையை தினமும் 10 முறையாவது பயன்படுத்தி விடுவோம். ஆனால், இந்த வார்த்தை எப்படி வந்தது என்பது தெரியுமா? ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி படி, ‘ஹலோ’ என்பது தொலைவில் இருப்பவரை அழைக்க பயன்படுத்தப்பட்ட holla, hollo என்ற வார்த்தைகளில் இருந்து வந்துள்ளது. பழைய ஆங்கில சொற்றொடரான ’hale be thou’ என்பதிலிருந்து இச்சொல் பெறப்பட்டுள்ளது. இதன் அர்த்தம், ‘ஆரோக்கியமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்’ .
கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணியில் திடுக்கிடும் காரணங்கள் உள்ளதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. அதில், அதானி மீது குற்றச்சாட்டு எழுப்பி இந்திய பங்குச் சந்தையை சரியச் செய்வதும், அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் SBI & LIC ஆகிய நிறுவனங்களை சீர்குலைப்பதும் அமெரிக்க சதித் திட்டத்தின் முக்கிய நோக்கம் எனக் கூறியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெறும் 5 நாட்களில் சவரனுக்கு ₹2,320 உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது. 17ஆம் தேதி ₹55,480க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று ₹57,800க்கு விற்கப்படுகிறது. அன்று ₹6,935ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், இன்று ₹7,225க்கு விற்பனையாகிறது. உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக இருக்கும் தங்கத்தின் விலை இப்படி உயர்வது அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.
BGT முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷனின் முடிவில் இந்தியா 51/4 எடுத்து தடுமாறி வருகிறது.ஜெய்ஸ்வால்(0), படிக்கல் (0), கோலி (5), ராகுல் (26) அடுத்தடுத்து வெளியேறினார்கள். களத்தில் பண்ட் (10), ஜூரேல் (4) இருக்கிறார்கள். ஆஸி. தரப்பில் ஸ்டார்க், ஹேசில்வுட் இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
மேற்கு வங்கம் பங்குரா அரசு ஹாஸ்பிட்டல் கழிவறையில் குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்விச் சென்றது. கடந்த 18ம் தேதி நிகழ்ந்த சம்பவத்தின் போட்டோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்தும் ஹாஸ்பிட்டல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கர்ப்பிணியின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பாஜக மாஜி அமைச்சர் பிரதிமா பூமிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.