News November 22, 2024
ஹாஸ்பிட்டலில் குழந்தையை கவ்விச் சென்ற நாய்!

மேற்கு வங்கம் பங்குரா அரசு ஹாஸ்பிட்டல் கழிவறையில் குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்விச் சென்றது. கடந்த 18ம் தேதி நிகழ்ந்த சம்பவத்தின் போட்டோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்தும் ஹாஸ்பிட்டல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கர்ப்பிணியின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பாஜக மாஜி அமைச்சர் பிரதிமா பூமிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 12, 2025
வங்கதேசத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம்

வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பள்ளிகளில் P.E.T மற்றும் இசை பயிற்றுவிக்கும் கலைஞர்களின் பணி நியமனத்தை அரசு ரத்து செய்துள்ளது. பட்ஜெட் கட்டுப்பாடுகளே இந்த முடிவிற்கான காரணம் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவை இஸ்லாமியத்திற்கு விரோதமானது என்று இஸ்லாமிய குழுக்கள் கொடுத்த அழுத்தமே பணி நியமன ரத்துக்கு காரணம் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
News November 12, 2025
RDX எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?

உலகின் மிகவும் ஆபத்தான வெடிபொருளான RDX (Royal Demolition Explosive), இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாகும். இதில் சிறிய அளவு வெடித்தால் கூட ஒட்டுமொத்த ஏரியாவும் சிதைந்து போகும். அதே நேரத்தில் IED என்பது RDX, TXT அல்லது அமோனியம் நைட்ரேட் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ஒரு வெடிபொருள் சாதனமாகும். இந்த அனைத்து வெடிபொருள்களை ஒப்பிடுகையில், RDX மிகவும் ஆபத்தானது.


