India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நவீன கால போர்களுக்கு தயாராக இருக்க வேண்டுமென பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், பாரம்பரிய போர் முறைகளுக்குப் பதிலாக, சைபர், விண்வெளி, பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்போது நடப்பதாகக் கூறினார். மேலும், புதிய களத்தில் நடக்கும் போர் பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது என்றார்.
டெல்லியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள ரோகிணி நகரில் உள்ள பிரகாஷ் விஹாரில் இயங்கி வரும் சிஆர்பிஎப் பள்ளி முன்பு இன்று காலை 9.30 மணிக்கு பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நொடிகளிலேயே அங்கு புகை மண்டலம் சூழ்ந்தது. தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வெடித்தது வெடிகுண்டா அல்லது மர்மப்பொருளா என போலீஸார் விசாரிப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான விடுமுறை லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி, 1) குடியரசு தினம், 2) சுதந்திர தினம், 3) காந்தி பிறந்தநாள், 4) புத்த பூர்ணிமா, 5) கிறிஸ்துமஸ், 6) தசரா, 7) தீபாவளி 8) புனித வெள்ளி, 9) குருநானக் பிறந்தநாள், 10) பக்ரீத், 11) ரம்ஜான், 12) மகாவீர் ஜெயந்தி, 13) மொஹரம், 14) முகமது நபி பிறந்தநாள். இவை கட்டாய விடுமுறை. இதை தவிர, 12 விருப்ப விடுமுறைகளும் வருகின்றன.
1) ரேடியோவில் முதன்முதலாகப் பேச்சை ஒலிபரப்பியது யார்? 2) இந்தியாவில் முதலில் உருவான மாநிலம் எது? 3) எந்த வண்டு இனத்தின் முட்டைகள் ஒளி வீசும்? 4) உலகிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் உலோகம் எது? 5) NIA என்பதன் விரிவாக்கம் என்ன? 6) வாசனைத் தபால் தலையை வெளியிட்ட முதல் நாடு எது? 7) உடல் முழுவதும் சுவை மொட்டுகள் கொண்ட உயிரினம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
20 லிட்டர் குடிநீர் கேன், சைக்கிள், பயிற்சி நோட்டுப்புத்தகங்கள் மீதான ஜிஎஸ்டியை 5%ஆக குறைக்க ஜிஎஸ்டி மறு ஆய்வுக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ₹5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு பிரீமியத்திற்கு விலக்கு அளிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், ஷூக்களுக்கான ஜிஎஸ்டி 18%இல் இருந்து 28%ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $10.75 பில்லியன் சரிந்து. $690.43 பில்லியனாக உள்ளது. பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் குறைவது இதற்கு முக்கிய காரணம். அக்டோபர் 11ஆம் தேதி தரவுகளின்படி, தங்கம் கையிருப்பு $98 மில்லியன் குறைந்து, $65.658 பில்லியனாக இருக்கிறது. சிறப்பு வரைதல் உரிமம் (SDRs) பொறுத்தவரையில், $86 மில்லியன் குறைந்து, $18.339 பில்லியனாக உள்ளதாக RBI தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாகவுள்ள 26 ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. பொறியியல் & மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்ற விரும்புவோர் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree, B.E, B.Tech, B.Arch. வயது வரம்பு: 21-35. சம்பளம்: ₹20,000-₹1,00,000. தேர்வு முறை: நேர்காணல். கூடுதல் விவரங்களுக்கு இந்த <
மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சளி, தலைவலி, உடல்சோர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் சீந்தில் தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சீந்தில்கொடி இலை, சுக்கு, மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான சீந்தில் தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
ஆணோ, பெண்ணோ இருவருமே நிதி சார்ந்த விஷயங்களில் மதிப்பு கொடுப்பவராக இருக்க வேண்டும் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். டேட்டிங்கின்போது, பெண்களே செலவழிக்க வேண்டுமென சில ஆண்கள் விரும்புவதாகக் கூறிய அவர், வசதி படைத்த பெண்களுடன் டேட்டிங் செல்லும் ஆண்கள், செலவு செய்ய முன்வருவதில்லை என்றார். மேலும், டேட்டிங் செய்தபோது, இதுபோன்ற சூழலை தானும் எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பான வழக்கில் ரயிலை கவிழ்க்க சதி என்ற புதிய சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்து சம்பவத்திற்கு, லூப் லைன் சந்திப்பில் போல்ட், நட் கழற்றப்பட்டதே காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.