News November 22, 2024

ரஜினியை சந்தித்ததே அரசியல் தான்: சீமான்

image

ரஜினியை சந்தித்ததே அரசியல் தான், அரசியல் இல்லாமல் எதுவும் எல்லை என சீமான் கூறியுள்ளார். ரஜினியை நீண்ட நாள்களாக சந்திக்க வேண்டும் என்று இருந்ததாகவும், அவருடன் திரைத்துறை, அரசியல் என பல விஷயங்களை ஆலோசித்ததாகவும் கூறினார். மேலும், சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினியின் கூற்றை ஆதரித்த அவர், அதைத்தான் அமைப்பு தவறாக இருப்பதாக தான் கூறுவதாகவும் தெரிவித்தார்.

Similar News

News November 11, 2025

பிஹார் தேர்தல் கருத்துக் கணிப்பு… சிறிது நேரத்தில்

image

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 243 தொகுதிகளில், 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மாலை 6 மணிக்கு இறுதி வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 6:30 முதல் பல்வேறு ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. NDA கூட்டணி ஆட்சி தொடருமா, இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்பது ஓரளவு இந்த கருத்துக் கணிப்பில் தெரிந்துவிடும். முடிவுகளை அறிய வே2நியூஸில் காத்திருங்கள்.

News November 11, 2025

பிஹாரில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

image

பிஹாரில் இறுதிக்கட்டமாக இன்று நடைபெற்ற 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டெல்லி வெடிகுண்டு சம்பவத்தின் எதிரொலியாக, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 67.14% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஏற்கெனவே முதற்கட்ட தேர்தலில் 65.08% வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் 14-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

News November 11, 2025

ரஷித் கானுக்கு 2-வது திருமணம்?

image

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், கடந்த ஆக.20-ம் தேதி வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியதாக தெரிவித்துள்ளார். தான் எதிர்பார்த்தது போல அன்பு, அமைதியை உருவகப்படுத்தும் வகையில் தன் மனைவி திகழ்வதாக கூறியுள்ளார். ரஷித் கான் கடந்த ஆண்டு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!