news

News November 23, 2024

இன்று கிராம சபை கூட்டம்

image

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வீடுதோறும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நவ.1ஆம் தேதி நடக்கவிருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

News November 23, 2024

நினைத்ததும் அருள் தரும் நரசிம்மர்

image

திருமாலின் தசாவதாரங்களில் மிகவும் சிறப்பான தனித்துவமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார், அசைக்க முடியாத பக்தி மற்றும் நம்பிக்கை உடைய பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு தெய்வம் ஓடி வரும் என்பதை உலகம் அறிய செய்த அவதாரம். நாளை என்ற சொல்லே தன்னிடம் கிடையாது என பக்தர்கள் வேண்டிய உடனேயே வந்து அருள் செய்ய கூடிய தெய்வமாக நரசிம்ம மூர்த்தி விளங்குகிறார்.

News November 23, 2024

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக

image

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கோரி BJP மூத்த தலைவர் வினோத் தாவ்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிரா பரப்புரையின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வினோத் தாவ்டே மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியானது. இந்நிலையில், ராகுல் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் தாவ்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

News November 23, 2024

மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விஜய் விருந்து

image

த.வெ.க. கட்சியின் முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் இன்று விருந்தளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் விறுவிறுப்பாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. விருந்தில் நில உரிமையாளர்கள், விவசாயிகள் அவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

News November 23, 2024

அதானி பற்றி பேசுவதை பாஜக விரும்பவில்லை: காங்கிரஸ்

image

அதானியை பற்றி யாரும் பேசவே கூடாது என பாஜக நினைப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குறை கூறியுள்ளார். மோடியை விமர்சித்து பேசினால் கூட அமைதியாக இருக்கும் பாஜகவினர், அதானி பெயரை உச்சரித்தால் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். பாஜகவின் தவறுகளை சுட்டிக்காட்டினால் பொய் வழக்கு போடுவதை பாஜக குறிக்கோளாக வைத்துள்ளதாகவும் அவர் சாடினார்.

News November 23, 2024

தமிழக ரயில் பயணிகளுக்கு GOOD NEWS

image

நாடு முழுவதும் இந்த மாத இறுதிக்குள் 370 ரயில்களில் 1,000 முன்பதிவில்லா பொது பெட்டிகளை இணைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் தெற்கு ரயில்வேயால் 51 ரயில்களில் பெட்டிகளை இணைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் இதுவரை சென்னை-தூத்துக்குடி, சென்னை-டெல்லி, குமரி- ஹவுரா உள்ளிட்ட 27 விரைவு ரயில்களில் 79 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இதனால் 5,600 பேர் கூடுதலாக பயணிக்க முடியும்.

News November 23, 2024

தேர்தல் கருத்துக்கணிப்புகள் பலிக்குமா? WAY2NEWS பாருங்க

image

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் கருத்துக்கணிப்புகள் பலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. இருமாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கவுள்ள நிலையில், அங்கு பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தது. கடந்த முறை ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கணிப்புகள் வெளியான நிலையில், அங்கு பாஜக ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

News November 23, 2024

BAN Vs WI : சதத்தை தவறவிட்ட மைக்கேல் லூயிஸ்

image

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 250/5 ரன்கள் எடுத்துள்ளது. ஆன்டிகுவாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய WI அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் மைக்கேல் லூயிஸ் 97, கவெம் ஹோட்ஜ் 90 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

News November 23, 2024

கருத்துக் கணிப்புகளை பொய்யாக்குவோம்: காங்கிரஸ்

image

மகாராஷ்டிரா தேர்தலில் INDIA கூட்டணி வெற்றி பெறும் என ராஜஸ்தான் CONG தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொய்யாக்குவோம் என்ற அவர், மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைவதை பாஜகவால் தடுக்க முடியாது என்றார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி இணைந்து பா.ஜ.க.வுக்கு தூக்கத்தை கெடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News November 23, 2024

வரலாற்றில் இன்று

image

1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1956 – அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்,
1980 – இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,800 பேர் உயிரிழந்தனர்.
2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2003 – திமுக மூத்த தலைவர் முரசொலி மாறன் மறைந்தார்.

error: Content is protected !!