India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் 2 புதிய வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களை இந்த குழுவில் இணைந்த பின் கற்பித்தல் சார்ந்த விவரங்கள் குழுவில் பகிரப்படும். இதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படுத்தப்படும். இதில் ஆர்வமில்லாத ஆசிரியர்களை ஊக்கப்படுத்தவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மனஅழுத்தம், பதற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் நகம் கடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. நகம் தானே என நாம் சாதாரணமாக நினைத்து மேற்கொள்ளும் இதனால் செரிமானம், நோய்தொற்று போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமல்ல அழகு எனும் அளவுகோலில் நகங்களை இழப்பதால், தன்னம்பிக்கையையும் இழக்கிறோம். எனவே இப்பழக்கத்திலிருந்து விடுபட, அதற்கு மாற்றாக Stress Ball போன்ற மாற்றுவழிகளை நாடுங்கள். >>SHARE IT
மத்திய அரசு நாடு முழுவதும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த செய்தியுடன் லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது முற்றிலும் தவறான செய்தி, மத்திய அரசு இதுபோன்ற எந்த திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை என மத்திய அரசின் ‘Fact Check’ தளம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த லிங்கை க்ளிக் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
தலித் சமூகத்தை சேர்ந்தவரை ஜாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தியது உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியதால், அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகா மாற்றப்பட்டது. தற்போது ₹411 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலும் வரவுள்ளதால், அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல்துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ஒவ்வொரு <<14426031>>இளஞ்சிவப்பு <<>>ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும். இதனால், இரவிலும் கூட பாதுகாப்பாக பெண்கள் வேலைக்கு சென்று வர முடியும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும்.
சென்னையில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் சமீபகாலமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனால், இரவிலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, தலைநகரில் பெண் ஓட்டுநர்கள் மூலம் முதற்கட்டமாக 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன.
கிழக்கு லடாக்கில் பதற்றத்தைத் தணிக்க இந்தியாவுடன் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதை சீனா உறுதி செய்துள்ளது. இதனை அமல்படுத்துவதற்கு இந்தியாவுடன் இணைந்து சீனா செயல்படும் எனவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தின் படி, 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன்னதாக இருந்த அதே ரோந்து நடைமுறைக்கு இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
கேரளாவில் ‘கங்குவா’ திரைப்படத்தை 500-க்கும் அதிகமான திரைகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ரசிகர்களுக்காக 100 காட்சிகளை திரையிட உள்ளதாகவும் விநியோகிஸ்தர் தெரிவித்துள்ளார். ‘வேட்டையன்’ படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்த அதே விநியோகஸ்தர் தான் இந்த படத்தையும் வெளியிட உள்ளார். நவ.14ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், வருகிற 26ஆம் தேதி நடைபெற உள்ள இசைவெளியீட்டு விழாவிற்காக படக்குழு தயாராகி வருகிறது.
திருப்பத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராணிபாபு (58), ஏழு நாள்களுக்குள் ₹2.39 கோடி GST கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ராணியின் பான் கார்டு, ஆதார் கார்டுகளைக் கொண்டு திருச்சியில் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதும், அதன் உரிமையாளர் ராணி எனக் குறிப்பிட்டதுமே இந்த நோட்டீஸ் வரக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
டானா புயல் எதிரொலியாக தமிழ்நாட்டிற்கு வரும் 7 ரயில்கள் உட்பட 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை மறுநாள் காரக்பூரில் இருந்து விழுப்புரம் வரும் அதிவிரைவு ரயில், நாளை மறுநாள் சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், நாளை மறுநாள் திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மாற்று ஏற்பாடு செய்துக் கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.