News November 30, 2024

புயல் உதவி தொலைப்பேசி எண்கள்

image

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டோர் அழைக்க வேண்டிய தொலைப்பேசி எண்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 1070 என்ற மாநில உதவி எண்ணையோ, 1077 என்ற மாவட்ட உதவி எண்ணையோ மக்கள் அழைக்கலாம். மேலும், வாட்ஸாப் மூலம் தொடர்புகொள்ள, 9445869848 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News November 7, 2025

அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

அண்ணா அறிவாலயத்திற்கு E-Mail மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டு மோப்பநாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அது புரளி என தெரியவந்தது. TN-ல் முக்கிய இடங்களை குறிவைத்து அண்மை காலமாக அடுத்தடுத்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் போலீசாரை திக்குமுக்காட வைக்கிறது.

News November 7, 2025

கலைத்தாயின் செல்ல மகனுக்கு இன்று ஹேப்பி பர்த்டே!

image

‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே’ என பாடிய சிறுவன்தான்,
இந்திய சினிமாவுக்கே Dictionary-யாக மாறுவார் என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நடிப்பில் மட்டும் உச்சம் தொட்டதால், அவரை விண்வெளி நாயகன் என புகழவில்லை. அந்த விண்வெளியில் மின்னும் நட்சத்திரங்கள் போல எழுத்து, இயக்கம், எடிட்டிங், தயாரிப்பு, மேக்கப் என அத்தனை துறைகளிலும் பிரகாசித்து கொண்டிருப்பவர். உங்களுக்கு பிடிச்ச கமல் படம் எது?

News November 7, 2025

நீருக்குள் இருந்து காட்சி கொடுக்கும் சிவன்!

image

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியில் மேலமலை என்ற சிறிய மலை குன்று உள்ளது. அக்குன்றில் தலையருவி சிங்கம் சுனையில், 15 அடி ஆழத்தில் ஜீரஹரேஸ்வரர் என்னும் குடைவரைக் கோவில் இருக்கிறது. இக்கோயிலில் குடைந்தே உருவாக்கப்பட்ட சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவராத்திரி அன்று, உள்ளூர் மக்கள் சுனையில் உள்ள நீரை வெளியேற்றிவிட்டு, சிவனை தரிசித்து செல்கின்றனர். SHARE IT.

error: Content is protected !!