news

News October 22, 2024

ஆன்டிபயாடிக் மருந்து ஆபத்தானதா?

image

ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின் படி மட்டுமே உட்கொள்ள வேண்டும். சரியான காரணத்துக்கு, சரியான அளவில், சரியான காலத்துக்கு மட்டுமே உட்கொண்டால் கடுமையான பாதிப்புகள் இருக்காது. ஆனால், மருந்து உட்கொள்ள தொடங்கி, உடல்நலம் கொஞ்சம் தேற தொடங்கியதும் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்துவது உடல்நலனுக்கு கேடாகும். அடிக்கடி ஆண்டிபயாடிக்ஸ் பயன்படுத்துவது, கிருமிகளின் ஆற்றலை அதிகரிக்கும் ஆபத்துண்டு.

News October 22, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

image

தீபாவளியை முன்னிட்டு, நல்ல தரத்துடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்டவற்றை இருப்பு வைக்கவும், இருப்பில் உள்ள பொருட்கள் வடகிழக்குப் பருவமழையால் சேதமடையாமல் காத்திடவும் அறிவுறுத்தியுள்ளார்.

PHOTO: பாறைகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட பெண்

image

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் நடந்தது போன்ற ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆனால் இது பெரிய குகை அல்ல, இரு பாறைகளுக்கிடையே சிறிய பள்ளத்தில் பெண் ஒருவர் மாட்டிக்கொண்டார். ட்ரெக்கிங் சென்றபோது பள்ளத்தில் விழுந்த தனது போனை எடுக்க முற்பட்டு பள்ளத்திற்குள் தலைகீழாக விழுந்தார். அவரது தோழி கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர், 7 மணி நேர போராட்டத்திற்குப் பின் அவரை மீட்டனர்.

பவுன்சர்களை வீசி கோலியை திணறடிப்பேன்: லாபுசாக்னே

image

கோலிக்கு பவுன்சர்களை வீசி திணறடிக்க தயாராக உள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே கூறியுள்ளார். 135 கி.மீ வேகத்தில் பவுன்சர் பந்துகளை வீசி கோலியின் ஈகோவை தொட உள்ளதாகவும், அவரை விரைவில் வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க விரும்புவதாகவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியா-ஆஸி. இடையேயான 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நவ.22இல் தொடங்குகிறது.

News October 22, 2024

காவி நிறத்துடன் BSNL லோகோ: காங்கிரஸ் கண்டனம்

image

காவி நிறத்துடன் BSNL புது லோகோ அறிமுகப்படுத்தப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். வந்தே பாரத் ரயில், டிடி நியூஸ் சேனல் லோகோவை தொடர்ந்து தற்போது BSNL லோகோவும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளதாகவும், பாஜக கொடியின் நிறமே எங்கும் இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாகவும் சாடியுள்ளார். பொதுத்துறை நிறுவனங்களுக்கு காவி அடிப்பதை பாஜக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News October 22, 2024

தன் பட காட்சிகளையே நீக்கச் சொன்ன கவின்

image

‘ஸ்டார்’ படத்தில் இருந்து 20 நிமிடக் காட்சிகளை தானே நீக்கச் சொன்னதாக நடிகர் கவின் தெரிவித்துள்ளார். படத்தின் அவுட் பார்க்கும் போது சில காட்சிகள் படத்தில் இருந்து விலகி நின்றதாகவும், அதை நீக்கச் சொல்லியதற்கு படக்குழு மறுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் கணித்தது போலவே படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்ததாகவும், ஆனால் தயாரிப்பாளர் ஹேப்பிதான் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 22, 2024

ரஷ்யா- உக்ரைன் போர்: புதினிடம் மோடி வலியுறுத்தல்

image

ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் அமைதியை நிலைநாட்ட இந்தியா துணை நிற்கும் என புதினிடம், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா சென்றுள்ள மோடி புதினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். தொடர்ந்து பேசிய அவர், இரு நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஆழமான நம்பிக்கையின் அடையாளமாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாகவும், ரஷ்யா இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு எனவும் குறிப்பிட்டார்.

News October 22, 2024

ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு

image

அரசு பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் 2 புதிய வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களை இந்த குழுவில் இணைந்த பின் கற்பித்தல் சார்ந்த விவரங்கள் குழுவில் பகிரப்படும். இதன் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்படுத்தப்படும். இதில் ஆர்வமில்லாத ஆசிரியர்களை ஊக்கப்படுத்தவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!