India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶அக். 27 (ஐப்பசி 10) ▶ ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM▶குளிகை: 3:00 PM – 4:30 PM▶ திதி: ஏகாதசி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு▶ பரிகாரம்: வெல்லம்▶ நட்சத்திரம்: மகம் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம், பூராடம். SHARE பண்ணுங்க.
➤கோதுமை மாவுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து பிசைந்து தயார் செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும். ➤பருப்பு வேகும்போது, சிறிது விளக்கெண்ணெய் சேர்த்தால், அது நன்கு குழைந்து வரும். ➤எள் டப்பாவில் சிறிது நெல்லைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. ➤கடுகு எண்ணெய் ஊற்றி செய்தால் ஊறுகாய் விரைவில் கெட்டுப்போகாது. ➤வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி ஆப்பம் மாவுடன் சேர்த்து வார்த்தால் சுவையாக இருக்கும்.
மத்திய கிழக்கில் மோதலில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினரும் பாெறுமை காக்க வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேல், ஈரான் மோதலால் மத்திய கிழக்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், மோதலால் யாருக்கும் பலனில்லை. அப்பாவி மக்களே பாதிக்கப்படுவர். ஆதலால் மோதலை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
உலகத் தரத்தில் கங்குவா திரைப்படம் எடுக்கப்பட்டு இருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (K.S) பாராட்டியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள அந்தப் படம், வருகிற 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படம் குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ், கங்குவா படத்தின் 5 நிமிட காட்சியை சூர்யா தன்னிடம் காட்டியதாகவும், அதை பார்த்து தாம் மிரண்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் ஈரானில் வைத்து இஸ்ரேலால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அக்.1இல் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் இன்று ஈரானில் தாக்குதல் நடத்தியது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், தங்களை தற்காத்து கொள்ளும் உரிமை, பதிலடி கொடுக்க வேண்டிய கடமை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஆண், பெண் ஏற்றத்தாழ்வுகளை பேசும் ‘Firebrand’ படத்தை நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் காணலாம். பெண்களிடம் விருப்பம் கேட்காமல் செய்யப்படும் கருத்தடை சிகிச்சை பற்றி பேசும் ‘Something Like a War’-ஐ யூடியூபில் கிடைக்கிறது. சன்னி லியோனின் வாழ்க்கை பற்றி பேசும் ‘Mostly Sunny’-ஐ அமேசான் பிரைமில் பார்க்கலாம். பெண்களை சுற்றியே கதை நகரும், ‘What Will People Say’, ‘Sara’s’ ஆகிய படங்களை அமேசான் பிரைமில் காணலாம்.
எல்லைப் பிரச்னை தொடர்பான இந்தியா- சீனா இடையிலான தீர்மானம் ஒருநாளில் எட்டப்பட்டதல்ல என MEA ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அரசு+ தூதரகம்+ராணுவம் ஆகிய மூன்றின் கூட்டு முயற்சியால் கிடைத்த பலன் எனவும், இதன் மூலம் கல்வான் மோதலுக்கு முன்பு இருந்த ரோந்து உரிமையை நாம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், சீனாவுக்கு போட்டியாக நாமும் உள்நாட்டு தயாரிப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் காலியாக உள்ள 600 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. Apprentices பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: Any UG Degree. வயது வரம்பு: 20-28. ஆன்லைன் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ. 24. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
➤மேஷம் – நிறைவு
➤ரிஷபம் – மேன்மை
➤மிதுனம் – ஆதாயம்
➤கடகம் – அசதி
➤சிம்மம் – நற்செயல்
➤கன்னி – உயர்வு
➤துலாம் – வரவு
➤விருச்சிகம் – ஆக்கம்
➤தனுசு – அனுகூலம்
➤மகரம் – நட்பு
➤கும்பம் – நஷ்டம்
➤மீனம் – ஜெயம்
Post Office வழங்கும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் (MSSC) முதிர்வு காலம் 2 ஆண்டுகளாகும். வீட்டில் இருக்கும் பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும், 2025 March-க்குள் இதில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுத் தொகை ₹2 லட்சம். 7.5% வட்டி வழங்கப்படுகிறது. ₹2 லட்சம் முதலீடு செய்தால் ₹32,044 வட்டி கிடைக்கும். ஒராண்டு முடிந்ததும் முதலீட்டு பணத்தில் 40% திரும்ப பெறலாம்.
Sorry, no posts matched your criteria.