News December 6, 2024
விரும்பிய பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கலாம்: UGC

UG, PG பட்டப்படிப்புகளில் முந்தைய பாடப்பிரிவு அல்லாமல், எந்த பாடப்பிரிவையும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம் என UGC அறிவித்துள்ளது. +2, UG பட்டப்படிப்புகளில் அறிவியல் சார்ந்த பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் உயர் கல்வியில் அதே பாடப்பிரிவில் மட்டுமே சேர முடியும். இந்த விதிமுறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தன் விருப்பத்திற்கு ஏற்ப வேறு பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
Similar News
News July 6, 2025
₹8,000 கோடியில் புதிய கன்டெய்னர் துறைமுகம்

சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் 2 கிமீ தூரத்துக்கு புதிய கன்டெய்னர் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடந்து வருவதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார். இது ₹8,000 கோடியில் அமைக்கப்படவுள்ளது என்றும், சரக்கு வாகனங்கள் நிறுத்தம், கப்பல் பழுதுபார்ப்பு நிலையம் உள்ளிட்டவை இடம்பெற உள்ளதாகவும் கூறினார். இதன்மூலம் கூடுதலாக சரக்குகளைக் கையாள முடியும் என்றார்.
News July 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இறைமாட்சி ▶குறள் எண்: 388 ▶குறள்: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். ▶பொருள்: நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.
News July 6, 2025
ஹீரோவாகும் இயக்குநர்கள்.. ரசிகர்கள் கவலை..!

பார்த்திபன், சேரன், சுந்தர் சி, சசிகுமார் என தமிழ் சினிமா இயக்குநர்கள் ஹீரோவாவது புதிய விசயமல்ல. ஆனால் நல்ல திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த அவர்கள் அதன்பிறகு இயக்கத்தில் பெரிய வெற்றி பெறவில்லை. நடிகர்களாகிவிட்ட பின் மீண்டும் அவர்களிடமிருந்து அப்படிப்பட்ட படங்கள் எப்போது வரும் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சேரன், GVM, சசிகுமார் உள்ளிட்ட இயக்குநர்களை ரொம்ப மிஸ் பண்றோம் இல்லையா?