India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (நவ.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
➤மேஷம் – வெற்றி
➤ரிஷபம் – எதிர்ப்பு
➤மிதுனம் – அசதி
➤கடகம் – சிக்கல்
➤சிம்மம் – வரவு
➤கன்னி – சுகம்
➤துலாம் – தாமதம்
➤விருச்சிகம் – மகிழ்ச்சி
➤தனுசு – தடங்கல் ➤மகரம்- நட்பு
➤கும்பம் – பயம் ➤மீனம் – கவலை
ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடித்தவர்களில் மிகவும் வசீகரமானவர் டேனியல் கிரெய்க். இவரது படங்களில் ரொமான்ஸை விட ஆக்ஷன் அதிகம். இவர் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்கப் போவதில்லை என திடீரென கூறிவிட்டார். இந்நிலையில், இனி ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘யார் நடித்தால் என்ன? எனக்கு அதுபற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை’ என்று பதிலளித்துள்ளார்.
உங்கள் அன்புக்கு உரியவரை காதலுடன் அணைத்தால் *இணையருடன் நெருக்கம் கூடும், பிணைப்பு வலுவாகும் *செரடோனின் ஹார்மோன் சுரப்பால் உற்சாகம் பிறக்கும் *உணர்வுகளை பரிமாறிக்கொள்ள உதவும் *அப்போது சுரக்கும் எண்டார்பின் ஹார்மோன் உடல்வலியை குறைத்து, ரிலாக்ஸ் செய்யும் *மனஅழுத்தம் தணியும். *மனச்சோர்வு நீங்கும் *இதயத்தை இதமாக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் *கவலை, பதற்றம், மரணம் பற்றிய அச்சம் குறையும்.
எக்ஸ், இன்ஸ்டாகிராமுக்கு மாற்றாக, TRUTH என்ற வலைதள செயலியை டிரம்ப் தொடங்கினார். அவர் அதிபர் ஆனதால், இச்செயலியின் பங்குகள் விற்கப்படும் எனக் கூறப்பட்டது. இதனால் அப்பங்குகளின் விலை 42% அளவுக்கு குறைந்தது. இந்நிலையில், ட்ரூத் பங்குகளை விற்கப் போவதில்லை என டிரம்ப் ஒரு பதிவை வெளியிட்டார். சில மணிநேரங்களிலேயே அவரது பங்குகளின் விலை பல மடங்கு உயர்ந்து, டிரம்பின் சொத்து 500 மில்லியன் டாலர் உயர்ந்தது.
நடிகர் அஜித்குமார் தற்போது ஒரே நேரத்தில் ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்களே சோர்ந்துவிட்டனர். ஆனால், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ‘குட் பேட் அக்லி’ படத்தின் நியூ லுக்குகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அஜித் விரைவில் லண்டனில் குடும்பத்துடன் செட்டில் ஆக போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாழ்க்கையின் கடைசி நாளே இன்றுதான் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சிகரமாகக் கழிக்க வேண்டும். அதற்கு நிறைய பணம் வேண்டும் என்றில்லை. காரணம், மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. உங்கள் மனதுக்குள்தான் இருக்கிறது. சின்னச் சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள், புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள், மற்றவர்களுக்காக வாழவே கூடாது. உங்களுக்கு எது மகிழ்ச்சி?
உ.பி. மாநிலம் கான்பூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் கோச்சிங் சென்டருக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு ஆசிரியர்களாக இருந்த சாகில் சித்திக்கும் (32), விகாஸ் போர்வலும் (37) அந்த மாணவியை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளனர். மேலும், இதை வெளியே சொன்னால், வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டி பல முறை அவரை பலாத்காரம் செய்துள்ளனர். மாணவியின் புகாரின் பேரில் தற்போது அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல், கரூர், ஈரோடு, தி.மலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், வெளியே சென்றுள்ள மக்கள், பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லவும்.
☆வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகமாகும். இதனால் ஆயுள் விருத்தியாகும் என்கிறது ஆயுர்வேதம்.
☆கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடுகிறது.
☆குதிகால் நரம்பை தொட்டுக் கொண்டிருப்பதால் மூளைக்கு செல்லும் உணர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
☆இதனால் கோபம் & உணர்ச்சி வசப்படுதல் கட்டுப்படும்.
Sorry, no posts matched your criteria.