News November 9, 2024
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா?

வாழ்க்கையின் கடைசி நாளே இன்றுதான் என்பதைப் போல ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சிகரமாகக் கழிக்க வேண்டும். அதற்கு நிறைய பணம் வேண்டும் என்றில்லை. காரணம், மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. உங்கள் மனதுக்குள்தான் இருக்கிறது. சின்னச் சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள், புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள், மற்றவர்களுக்காக வாழவே கூடாது. உங்களுக்கு எது மகிழ்ச்சி?
Similar News
News November 13, 2025
ஆம்னி பஸ் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: EPS

தமிழகத்தில் ஆம்னி பஸ் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண அரசை, EPS வலியுறுத்தியுள்ளார். அண்டை மாநிலங்கள் அபராதம் விதிப்பதால், தமிழக ஆம்னி பஸ்கள் கடந்த 9-ம் தேதி முதல் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படாமல் உள்ளதாக கூறிய அவர், இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
News November 13, 2025
வாவ்.. என்ன ஒரு கற்பனை.. அசத்திய போட்டோகிராபர்!

சாதாரண போட்டோவையும் தனது கிரியேட்டிவிட்டி மூலம், ஆச்சரியமூட்டும் வகையில் மாற்றி வருகிறார் புகைப்பட கலைஞர் Suissas. ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை Guitar-ஆகவும், பாலத்தின் தூணை கத்திரிகோலாகவும் மாற்றி பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறார். அவரின் கைவண்ணத்தை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். உங்களை மிகவும் கவர்ந்த போட்டோ எது?
News November 13, 2025
சற்றுமுன்: விலை ₹10,000 உயர்ந்தது.. புதிய உச்சம்

வரலாறு காணாத புதிய உச்சமாக வெள்ளி விலை இன்று ஒரு நாளில் மட்டும் ₹10,000 அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ₹173-க்கும், ஒரு கிலோ ₹1.73 லட்சத்திற்கும் விற்பனையானது. ஆனால், இன்று ஒரு கிலோ ₹1.83 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ஒரு வாரத்தில் ₹18,000 வரை அதிகரித்திருப்பது நடுத்தர மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


