India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படம் டிராகன். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் கதாபாத்திர விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வேல்குமாராக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும், பரசுராமாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
▶குறள் பால்: பொருட்பால்
▶அதிகாரம்: வினைத்திட்பம்
▶குறள் இயல்: அமைச்சியல் ▶குறள் எண்: 661
▶குறள் :
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
▶விளக்க உரை: மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.
இரவில் நகம், முடி வெட்டக்கூடாது எனக் கூறப்படுவதுண்டு. இது சாஸ்திரமோ, சம்பிரதாயமோ இல்லை. முற்காலத்தில் மின்சார வசதி இல்லாததால் நகம், முடியை இரவில் வெட்டினால் எங்காவது விழுந்துவிடும். குறிப்பாக உணவு போன்றவற்றில் விழுந்தால், கண்ணுக்கு தெரியாது. அதை சாப்பிட்டால் உடல் உபாதை ஏற்படும். இதனை தவிர்க்கவே நம் முன்னோர்கள் இரவு நேரத்தில் நகம், முடி வெட்டினால் குடும்பத்திற்கு ஆகாது எனக் கிளப்பிவிட்டுள்ளனர்.
அக்டோபரில் பெய்த மழையை எப்படி சமாளித்தோமோ, அதேபோல தற்போதும் அனைத்து ஏற்பாடுகளும் தயார் என Deputy CM உதயநிதி கூறியுள்ளார். எவ்வளவு பெரிய மழை வந்தாலும் நிச்சயம் அதனை தமிழக அரசு சமாளிக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், மக்கள் தங்களது ஒத்துழைப்பை அரசுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
▶நவ.10 (ஐப்பசி 24) ▶சனி ▶நல்ல நேரம்: 07:45 – 08:45 AM, 03:15 – 04:15 PM ▶கெளரி நேரம்: 10:45 – 11:45 AM, 01:30 PM – 03:30 PM ▶ராகு காலம்: 04:30 – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 – 01:30 PM ▶குளிகை: 03:00 – 04:30 PM ▶திதி: 04:59 PM வரை நவமி பின்பு தசமி ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: வெல்லம் ▶ நட்சத்திரம்: 07:53 AM வரை அவிட்டம் பின்பு சதயம் ▶சந்திராஷ்டமம்: 07:53 AM வரை புனர்பூசம் பின்பு பூசம்.
ஜம்மு-காஷ்மீரை பாஜக விரும்பும்போது, சட்டப்பிரிவு 370ஐ காங்கிரஸ் விரும்புவதாக PM மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டுவர உலகம் முழுவதும் பாகிஸ்தான் சுற்றி வருவதாகவும், அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸும் இந்தக் கொள்கையை கையில் எடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். இவ்வாறு செயல்படும் காங்கிரஸை மன்னிக்கலாமா? எனவும் அவர் வினவினார்.
கோலிவுட்டில் உதவி இயக்குநர்களுக்கு போதிய ஊதியம் கிடைப்பதில்லை என சாய் பல்லவி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட்-கோலிவுட் இடையிலான வித்தியாசம் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது கோலிவுட் உதவி இயக்குநர்கள் கடின உழைப்பாளிகளாகவும், திறமையானவர்களாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், போதிய ஊதியம் அவர்களுக்கு கிடைக்காதது வேதனையளிக்கிறது என்றார்.
*1958: நடிகர் ஆனந்த்ராஜ் பிறந்தநாள்
*1975: கவிஞர் தாமரை பிறந்தநாள்
2013: தமிழக எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை நினைவு நாள்
*2019: டி.என்.சேஷன் நினைவு நாள் (இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்)
*நவம்பர் 10: உலக அறிவியல் தினம்
*வரலாற்று பொன்மொழி: இன்றைய தினத்தை புரிந்துகொள்ள, நேற்றைய தினத்தை நீங்கள் ஆராய வேண்டும்.
சஞ்சு சாம்சனின் திறமையான ஆட்டத்திற்கு, கம்பீர் போன்ற புதிய பயிற்சியாளர்கள் காரணம் இல்லை என டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். SAக்கு எதிரான நேற்றைய T20 போட்டியில் சதம் விளாசியதை பாராட்டிய அவர், 3 வடிவ கிரிக்கெட்டிலும் சாம்சன் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், சிறப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்ற முயற்சியை அவர் தாமாக பெற்றுள்ளதாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (நவ.10) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.