news

News November 10, 2024

நாள் முழுவதும் புத்துணர்ச்சி அளிக்கும் நெல்லி தேநீர்

image

மலக்குடலில் தேங்கி நிற்கும் நச்சு கழிவுகளை நீக்கி, முடி உதிர்வை தடுக்க நெல்லி தேநீரை பருகலாம் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். வைட்டமின் C நிறைந்த பெரு நெல்லிக்காயை நறுக்கி, மிளகு, கிராம்பு, துளசி, இஞ்சி, மஞ்சள், ஏலக்காய் தூள் சேர்த்து நீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான கருமிளகு தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News November 10, 2024

ஒரே நாளில் 2,153 போலீசார் இடமாற்றம்.. டிஜிபி அதிரடி

image

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 2,153 போலீசாரை பணியிட மாறுதல் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் பணிபுரியும் போலீசார், பல்வேறு காரணங்களுக்காக தங்களுக்கு இடமாறுதல் அளிக்க வேண்டுமென விருப்ப கோரிக்கை அளித்திருந்தனர். அதையேற்று போலீசாரை பணியிட மாறுதல் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் ஆணையிட்டுள்ளார்.

News November 10, 2024

ரூ.200 கோடி வசூலை கடந்தது “அமரன்”

image

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம், மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அப்படம், ரிலீசான 10 நாள்களில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News November 10, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் 9 பேரை கொன்ற ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ➤பீசாட்-2 என்ற தொலையுணர்வு செயற்கைக்கோள் புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக சீனா
தெரிவித்துள்ளது. ➤தென்கொரியாவில் தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்தும்படி அந்நாட்டு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ➤அதிபர் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அயர்லாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

News November 10, 2024

தமிழக மீனவர்கள் 21 பேர் கைது

image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து மீனவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வரும் சூழலில், நிரந்தர தீர்வு வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

News November 10, 2024

BGT தொடர் : ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

image

இந்திய அணிக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான 13 பேர் கொண்ட பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (WK) ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லியோன், மிட்ச் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க். முதல் டெஸ்ட் நவ.22 துவங்குகிறது.

News November 10, 2024

டெல்லி கணேஷ் என பெயர் வர காரணம்…

image

தமிழ் சினிமாவில் பல அடைமொழிகளை கொண்ட நடிகர்களை நாம் பார்த்துளோம். இவர்களில் தனி அடையாளத்தை கொண்டவர் டெல்லி கணேஷ். இவருக்கு <<14573434>>டெல்லி கணேஷ்<<>> என பெயர் சூட்டியவர் கே.பாலச்சந்தர். பட்டினப்பிரவேசம் படத்தில் அறிமுகப்படுத்தி டெல்லி Air-force-ல் பணிபுரிந்ததை வைத்தும், அங்கு தான் முதல் நாடகத்தில் நடித்தார் என்பதாலும், டெல்லி கணேஷ் என பெயர் வைத்தார் கே.பாலச்சந்தர்.

News November 10, 2024

மனப் பிரச்னைகளை தீர்க்கும் பழமுதிர்சோலை ஆண்டவன்

image

வண்ணக்குறமகள் வள்ளியிடம் வேடனாக வந்து காதல் செப்பிய முருகன் ஏகாந்தமாக வீற்றிருக்கும் இன்ப ஸ்தலமென கந்தபுராணம் பழமுதிர்சோலையைக் குறிக்கிறது. ஞான-தியான-ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நிற்கும் இங்குள்ள அதிசய சேயோனை, யமன் ரிஷப வடிவெடுத்து தவமிருந்து வணங்கியதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இக்கோயிலுக்கு சென்று சோலைமலை கந்தனை வணங்கினால் தீவினை & மனப் பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்.

News November 10, 2024

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க…

image

நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க சரியான அளவில் புரதம், நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட் உட்கொள்வது மிகவும் முக்கியமானது * காலை உணவில் ஓட்ஸ் எடுத்து கொள்ளலாம் * வாழைப்பழத்தை அதிகாலையில் சாப்பிடுவது உடல் ஆற்றலை அதிகரிக்கும் * புரதம் நிறைந்த முட்டைகள் சாப்பிடுவது சிறப்பானது * சர்க்கரை வள்ளிக்கிழங்கு குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் * கீரையை ஆம்லெட் மற்றும் பிரட் டோஸ்ட் பலவற்றுடன் கலந்து உட்கொள்ளலாம்.

News November 10, 2024

கம்பீரின் தலைமை பதவிக்கு ஆபத்து?

image

டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீரை விடுவிக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததால், IND அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை IND அணி வெல்லாவிட்டால் கம்பீர் கழற்றி விடப்படுவார் என கிரிக்கெட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

error: Content is protected !!