India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இளைஞர்கள் போதைப்பொருட்களை நாடுவதை தடுப்பதற்காக ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த தலைப்பில் ரீல்ஸ், மீம்ஸ், போஸ்டர் டிசைன் செய்யும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவ.15-க்குள் போட்டியாளர்கள் தாங்கள் செய்த ரீல்ஸ் உள்ளிட்டவற்றை tndiprmediahub@gmail.com என்ற மெயிலில் அனுப்ப வேண்டும். வெற்றி பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத் தொகை அளிக்கும் PM Internship திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதற்கு https://pminternship.mca.gov.in. இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 21-24 ஆகும். +2, பட்டதாரி, டிப்ளமோ, ஐடிஐ ஆகியவை கல்வி தகுதியாகும். தேர்வு செய்யப்படுவோருக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வங்கி, எரிசக்தி உள்ளிட்ட நிறுவனங்களில் Internships வழங்கப்படும்.
நாட்டின் முன்னணி தாெலைத் தொடர்பு நிறுவனமான JIO, ரூ.198 கட்டணத்தில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. அந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 14 நாள்கள் ஆகும். தினமும் 2 ஜிபி என மொத்தம் 14 நாள்களுக்கு 28 ஜிபி டேட்டா அளிக்கிறது. தினமும் 2 ஜிபி டேட்டா தீர்ந்ததும் குறைந்த வேகத்தில் அன்லிமிடேட் டேட்டா, 14 நாள்களும் அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றையும் JIO அளிக்கிறது.
விஜயபிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். இது குறித்து கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் பிரேமலதா கூறினார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயதில் நாம் அனைவரும் ரூபிக் கியூப்பை வைத்து விளையாடி இருப்போம். யோசிப்பதையும், நினைவாற்றலையும் அதிகப்படுத்தக்கூடிய மிகச்சிறந்த கருவியான ரூபிக் கியூப் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடம் 50 ஆண்டுகளை நினைவு செய்துள்ளது. 1974-ல் வடிவமைப்பு பேராசிரியரான எர்னோ ரூபிக் என்பவர் இதை கண்டுபிடித்தார். நீங்க இந்த கேம்மை விளையாடி இருக்கீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
செரிமான சுரப்பிகளைச் சுரக்கச் செய்து, உடலை நன்னிலையில் வைத்திருக்கும் ஆற்றல் ஓமத்துக்கு இருப்பதாக அகத்தியர் பாடல் கூறுகிறது. பைனீன், தைமால், சைமீன் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதனை நன்னீரில் 3 மணிநேரம் ஊறவைத்து, அந்த நீரை 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் ஓமத் தீநீரை வடிகட்டி பருக அடுத்த சில நிமிடங்களிலேயே புளி ஏப்பம், குமட்டல், அஜீரணம் போன்ற செரிமான பாதிப்பின் தீவிரம் குறையும்.
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் – அக்ஷ்யா திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவரும் ஜோடியாக பேட்டி அளித்துள்ளார்கள். அப்பேட்டியில், தொகுப்பாளினியான சுஹாசினி இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் ஏதேனும் ஒரு பாட்டை Dedicate செய்திருக்கிறீர்களா? எனக் கேட்டார். அதற்குப் பதிலளித்த தனுஷ், ‘அதெல்லாம் Coming Soon’ என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய அக்ஷ்யா தனுஷை நான் பேபி என்றுதான் அழைப்பேன் எனக் கூறினார்.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், “மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவால் காலமான செய்தி வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் அதிகமான படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய வாடிக்கையாளர்களுக்காக GPAY பல்வேறு வசதிகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில், UPI Circle-ம் ஒன்றாகும். அந்த வசதியின்கீழ், பிரைமரி கணக்கு வைத்திருப்பவர் மட்டும் வங்கிக் கணக்கை GPAY-யில் உள்ளிட்டால் போதும். அவரால் UPI Circle-இல் சேர்க்கப்படும் மற்றவர், அவர்களின் வங்கி கணக்கை உள்ளிட வேண்டாம். வங்கி கணக்கு இல்லாமலேயே பிரைமரி கணக்கால் அனுமதிக்கப்படும் வரம்பிற்குள் பணம் செலுத்தலாம். SHARE IT.
இன்று 10 மணிக்கு <<14573948>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) கடல் கொண்ட குமரிக்கண்டம் 2) Research Department eXplosive 3) பறவையியல் 4) ரீட்டா ஃபரியா பவல் 5) கைமோகிராப் 6) நீலம் 7) புளோரின் 8) அரபு. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.