News November 10, 2024
மாதம் ரூ.5,000 ஊக்கத் தொகை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத் தொகை அளிக்கும் PM Internship திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதற்கு https://pminternship.mca.gov.in. இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 21-24 ஆகும். +2, பட்டதாரி, டிப்ளமோ, ஐடிஐ ஆகியவை கல்வி தகுதியாகும். தேர்வு செய்யப்படுவோருக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வங்கி, எரிசக்தி உள்ளிட்ட நிறுவனங்களில் Internships வழங்கப்படும்.
Similar News
News November 8, 2025
கிளாஸி துல்கர் சல்மான்

மலையாளம், தமிழ், தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் துல்கர் சல்மானுக்கு, 3 மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது குரல் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. கதை தேர்வில் அதீத கவனம் செலுத்தும் துல்கர், நடிப்பிலும் மிரட்டி வருகிறார். இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள சமீபத்திய போட்டோஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிளாஸி துல்கர் சல்மானை பிடித்திருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 8, 2025
பிஹாரில் 160 இடங்களில் வெற்றி உறுதி: அமித்ஷா

பிஹார் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு SIR பணிகளே காரணம் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் NDA கூட்டணிக்கு பெரும் மக்கள் ஆதரவு இருப்பதாக கூறிய அவர், குறைந்தபட்சம் 160 இடங்களில் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு சட்டவிரோத ஊடுருவல் முற்றிலுமாக தடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
News November 8, 2025
போருக்கு ரெடி: பாகிஸ்தானுக்கு ஆப்கன் பதிலடி

இஸ்தான்புல்லில் நடத்த PAK-AFG இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியடைந்தது. இதனையடுத்து இனி பேச்சுவார்தை நடத்த வாய்ப்பில்லை என பாகிஸ்தான் <<18234772>>அமைச்சர் ஆசிப் <<>> கூறியிருந்தார். இதனால் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கருதும் ஆப்கான், போருக்கு தயார் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக PAK-AFG எல்லையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


