India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி வெலவெலத்து போகும் என தமிழிசை தெரிவித்துள்ளார். திமுகவை தோற்கடிக்க நினைப்பவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அது விஜய், சீமான், OPS, TTV ஆகியோரின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார். வருங்காலங்களில் NDA கூட்டணி பலப்படும் என்று குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணி அப்படியே தொடராது என பேசியுள்ளார்.

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில், ஆஸ்திரேலியா அதிரடியாக ஆடி வருகிறது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் 66 பந்துகளில் 83 ரன்கள் விளாசியுள்ளார். 62 ரன்களுக்கு ஆட்டமிழக்க வேண்டிய அவர், நூலிழையில் தப்பினார். முன்னதாக கிராந்தி கவுட் பந்துவீச்சில் கேப்டன் அலிசா ஹீலி 5 ரன்னுக்கு அவுட்டாகினார்.

யஷ்-ன் ‘டாக்ஸிக்’ ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் பல காட்சிகள் திருப்தியளிக்கவில்லை என இயக்குநர் கீது மோகன்தாஸிடம் யஷ் கூறியதாகவும், அதனால் ரீ-ஷூட்டிங் நடப்பதாகவும் தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள தயாரிப்பு நிறுவனம் இன்னும் 140 நாள்களில், அதாவது திட்டமிட்டபடி 2026 மார்ச் 19-ம் தேதி ‘டாக்ஸிக்’ வெளியாகும் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்த ENG-க்கு எதிரான டெஸ்ட்டின் போது ரிஷப் பண்ட்டுக்கு காலில் அடிபட்டது. 3 மாத சிகிச்சைக்கு பிறகு, தென்னாப்பிரிக்க A அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், இன்று அவர் களமிறங்கினார். ஆனால், கோலியின் 18-ம் நம்பர் ஜெர்ஸியுடன் களமிறங்கியது பேசுபொருளாகியுள்ளது. ஜெர்ஸி என்பது வீரரின் அடையாளம் எனவும், சச்சின், தோனியை போன்று கோலியின் ஜெர்ஸிக்கும் ஓய்வளிக்க ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என EPS தனது முடிவை அறிவித்துள்ளார். மதுரையில் பேசிய அவர், நாமக்கல்லில் தனது பரப்புரையில், தவெகவினர் சிலர் தங்களது கட்சிக் கொடியை காட்டி ஆரவாரத்துடன் கூச்சலிட்டதால், அது கூட்டணிக்கான பிள்ளையார்சுழி என தான் கூறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம், தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என சூசகமாக பதில் அளித்தார்.

பெங்களூரு நகரின் சாலைகளில் குப்பை போட்டால், இனி குப்பை வீட்டு வாசலுக்கு வரும்! ஆம், நகராட்சியினர் ‘You dump it, you get it’ என்ற பெயரில் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளனர். அதாவது, எச்சரிக்கைகளை மீறி, சாலைகளில் குப்பையை வீசி செல்பவர்களின் வீட்டின் முன், குப்பையை கொட்டுகின்றனர். மேலும், அவர்களுக்கு ₹2,000 முதல் ₹10,000 வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. இப்படி செய்வது சரியான செயல் என நினைக்கிறீங்களா?

உலகளாவிய சந்தைகளின் பலவீனம், அமெரிக்கா – சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்த எச்சரிக்கைகள் காரணமாக, இன்று இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 593 புள்ளிகள் குறைந்து, 84,404 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 50, 176 புள்ளிகள் குறைந்து 25,878 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

டிரம்ப்பின் உள்நாட்டு பாதுகாப்பு கொள்கையால்(DHS), ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டவர் பணி அனுமதியான EAD-க்களின் தானியங்கி நீட்டிப்பு இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன், விண்ணப்பம் நிலுவையில் இருந்தாலும், பணியாளர்கள் 540 நாட்கள் வரை தொடர்ந்து வேலை செய்யலாம். இனி, புதுப்பித்தல் அனுமதி கிடைக்காவிட்டால், வேலையை உடனே நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மனசு பாரமா இருக்கும் போது, கொஞ்சம் லேசாக்க ஃபீல் குட் படங்களை பார்த்து ரசிக்கலாம். அப்படி தற்போது OTT-யில் காலம் கடந்தும் பேசப்படும் சில ஃபீல் குட் படங்களை பட்டியலிட்டுள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து அந்த படங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த லிஸ்ட்டில் இன்னும் வேறு எந்த படங்களை சேர்க்கலாம்.. கமெண்ட் பண்ணுங்க?

தங்கம் விலை <<18146662>>காலையில்<<>> சவரனுக்கு ₹1,800 குறைந்திருந்த நிலையில், மாலை நேர வர்த்தகத்தில் ₹1,600 அதிகரித்துள்ளது. தற்போது 22 கேரட் 1 கிராம் ₹11,300-க்கும், சவரன் ₹90,400-க்கும் விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது, இ<<18150226>>ந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை<<>> சந்தித்தது உள்ளிட்ட காரணங்களே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.