India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாடு முழுவதும் <<18476104>>இண்டிகோ<<>> விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசின் தனி அதிகார நோக்கமே காரணம் என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒவ்வொரு துறையிலும் மேட்ச் ஃபிக்ஸிங் செய்யாமல், நியாயமாக போட்டிகள் நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விமான தாமதங்கள் போன்ற பிரச்னைகளுக்கான விலையை கொடுப்பது சாமானிய மக்களே என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 1 மணி நேரத்திற்கு மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், அரியலூர், செங்கை, சென்னை, காஞ்சி, குமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. உஷாரா இருங்க நண்பர்களே!

IPL தொடரில் இருந்து விடைபெற்றதற்கான காரணத்தை <<18429842>>ஆண்ட்ரே ரஸல்<<>> தெரிவித்துள்ளார். வெறும் Impact பிளேயராக தொடர தனக்கு விருப்பமில்லை என கூறிய அவர், விளையாடும் போது பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் தாக்கத்தை உண்டாக்க விரும்பியதாக கூறியுள்ளார். மேலும், உலகின் மிகப்பெரிய தொடரான IPL-ல் விளையாட கடுமையான ஜிம் பயிற்சி தேவைப்படுவதாகவும், அதனை சமாளிப்பது மிகவும் சவாலான விஷயம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

உடனே உங்க போனை எடுத்து செக் பண்ணுங்க. வந்துள்ள அனைத்து மெசேஜ்களிலும் P, S, T, G ஆகிய எழுத்துகளில் ஏதாவது ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும் ★P (Promotional)- விளம்பரச் மெசேஜ் ★S (Service)- சேவை தொடர்பான மெசேஜ் ★T (Transactional)- பரிவர்த்தனை தொடர்பான மெசேஜ் ★G (Government)- அரசு சார்ந்த மெசேஜ். பொதுமக்கள் தங்களுக்கு வரும் மெசேஜ்கள் உண்மையானதா அல்லது மோசடியானதா என்பதை அறிய இது உதவும்.

ரத்தன் டாடாவின் வளர்ப்பு தயார் சிமோன் டாடா (95) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஜெனிவாவில் பிறந்த சிமோன், 1955-ல் நாவல் டாடாவை திருமணம் செய்தார். Lakmé, Trent Ltd உள்ளிட்ட பிராண்ட் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். #RIP

வார விடுமுறையையொட்டி இன்று முதல் டிச.7 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை,கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஊருக்கு செல்ல தயாராகிட்டீங்களா?

சிக்கந்தர் மசூதியை தவிர, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய அவர், தீபத்தூண் கோயிலுக்கு சொந்தமானது என்பது தீர்ப்புகளில் உறுதியாக உள்ளதாக கூறினார். இந்த விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி பொய்களை கூறி வருவதாக விமர்சித்த அவர், மதமோதலை ஏற்படுத்த தமிழக அரசு தான் முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் சட்லஜ், பியாஸ் நதிகளில் இருந்து, பருவமழை காலத்தை தவிர வேறு எந்த காலத்திலும் PAK-க்கு தண்ணீர் திறந்துவிடப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, இந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணைகளின் பாதுகாப்பிற்காக மட்டுமே நீர் வெளியேற்றப்படுவதாக குறிப்பிட்டார்.

NDA-வின் CM வேட்பாளராக EPS இருக்கும்வரை அமமுக, அந்தக் கூட்டணியில் இணையாது என TTV தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு பேசிய அவர், அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றார். மேலும், வரும் தேர்தலில் துரோகம்(EPS) வீழ்த்தப்பட்டு அதிமுக மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்பதை இன்றைய தினம் உறுதிமொழியாக எடுத்துள்ளதாகவும் கூறினார். உங்கள் கருத்து?

இந்திய மக்களின் வருமானம் குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. இதில், எத்தனை சதவீத மக்கள் எந்த வருமான பிரிவில் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிஞ்சுகோங்க. SHARE.
Sorry, no posts matched your criteria.