India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

NDA கூட்டணியில் இருந்து விலகிய OPS, அதன் பிறகு தனித்துவிடப்பட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறினர். அதன் முன்னோட்டமாகவே OPS-ன் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்துள்ளார் என்கின்றனர். இதனிடையே, OPS தரப்புக்கு NDA-வில் 3 சீட்டுகள் ஒதுக்கியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது தவறான தகவல் என OPS தெரிவித்துள்ளார். இதனால், அவர் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் நாம் நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகிறோம். இதனால் ஆரஞ்சு, நெல்லிக்காய், திராட்சை உள்ளிட்ட வைட்டமின் C நிறைந்த உணவுகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர்காலத்தில் நீராவி குளியல் எடுப்பது, வியர்வையை வெளியேற்றவும், தசைகளை தளர செய்யவும் உதவுமாம். இந்த டிப்ஸை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க…

பகவந்த் கேசரியின் ரீமேக்தான் விஜய்யின் ஜனநாயகன் என்பது <<18753964>>டிரெய்லரின் <<>>மூலம் உறுதியாகிவிட்டது. ஆனால் விஜய் நடித்த முதல் ரீமேக் ‘காதலுக்கு மரியாதை’ என்று இன்றைய விஜய் ரசிகர்கள் பலருக்கும் தெரியாது. கடந்த 1997-ல் மலையாள மொழியில் வெளியான ‘அனியத்திப்ராவு’ படத்தின் ரீமேக்தான் ‘காதலுக்கு மரியாதை. இதை தவிர கில்லி, போக்கிரி, காவலன் என 13 ரீமேக் படங்களில் விஜய் நடித்துள்ளார். அதன் போட்டோஸை மேலே பாருங்கள்..

பொங்கல் பரிசு தொகுப்புடன் எவ்வளவு பணம் வழங்குவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதன் முடிவில் ₹3,000 பணம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை CM இன்று அறிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசு தொகுப்புடன் ₹3,000 பணம் வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் வரும் 8-ம் தேதி தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது.

சென்னையிலிருந்து நெல்லை, நாகர்கோவில், ராமேஸ்வரம், செங்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த <<18747615>>SPL ரயில்களுக்கான<<>> முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே டிக்கெட்டை உடனே புக் செய்யுங்கள். சிறப்பு ரயில்கள் பற்றிய முழுவிவரம் மேலே போட்டோக்களாக இணைக்கப்பட்டுள்ளன. SHARE IT.

‘ஜனநாயகன்’ முதலில் தீபாவளிக்கு வர இருந்ததால், பராசக்தியை பொங்கலுக்கு கொண்டுவர திட்டமிட்டதாக SK விளக்கமளித்துள்ளார். ஆனால் ‘ஜனநாயகன்’ பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் பதற்றம் அடைந்ததாகவும், இதில் விஜய்க்கு எந்த பிரச்னையும் இல்லை என அவரது மேனேஜரின் மூலம் தெரிந்துகொண்டதால் நிம்மதியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஜன.9-ல் ஜனநாயகனையும், ஜன.10-ல் பராசக்தியையும் கொண்டாடுங்கள் என SK கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள போதைப்பொருள் பிரச்னையை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் MP வலியுறுத்தியுள்ளார். பூரண மதுவிலக்கை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும், அது எங்குமே வெற்றியடைந்ததாக சரித்திரம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் மது விற்பனையில் கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

▶ஜனவரி 4, மார்கழி 20 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:00 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
Sorry, no posts matched your criteria.