news

News November 28, 2024

இன்று மாலை உருவாகிறது புயல்: வானிலை மையம்

image

ஃபெங்கல் புயல் இன்று மாலை உருவாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் புயல் உருவாகக்கூடும் என்று முதலில் கணிக்கப்பட்டிருந்தது. பிறகு 12 மணி நேரம் தாமதமாகும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை முதல் நாளை காலை வரையிலான நேரத்தில் புயல் உருவாகும் என்று வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது.

News November 28, 2024

Cadet Chess: உலக சாம்பியன் பட்டம் வென்ற சர்வாணிகா

image

இத்தாலியில் நடைபெற்ற உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில், U-10 ரேப்பிட் பிரிவில் தமிழக சிறுமி சர்வாணிகா தங்கம் வென்றுள்ளார். மொத்தம் 11 சுற்று கொண்ட இப்போட்டியில், ரேப்பிட் பிரிவில் 9 புள்ளிகளுடன் தங்கம் வென்று சாதித்துள்ளார். அதே போல பிளிட்ஸ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். சர்வதேச செஸ் போட்டிகளில் அசத்திவரும் திவித், சர்வாணிகா உள்ளிட்டோர் நாட்டிற்கு கூடுதல் பெருமை சேர்த்து வருகின்றனர்.

News November 28, 2024

மாணவர் புக்கில் சாதிப் பெயர் எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்!

image

திருப்பத்தூர் மாவட்டம், குனிச்சி மோட்டூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் புத்தகத்தில் சாதிப் பெயரை எழுதிய ஆசிரியர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் விஜயகுமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

News November 28, 2024

அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டமில்லை: கிரண் ரிஜிஜு

image

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு (NCM) அரசமைப்பு சட்ட அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். விசிக MP ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது NCM-க்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களே போதுமானதாக இருக்கிறது. NCM சமர்ப்பிக்கும் அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என விளக்கமளித்துள்ளார்.

News November 28, 2024

தமிழ்நாட்டிற்கு 30ஆம் தேதி ரெட் அலர்ட்

image

ஃபெங்கல் புயல் வலுவிழந்து வருகிற 30ஆம் தேதி காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து, தமிழ்நாட்டிற்கு வருகிற 30ஆம் தேதி வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் 30ஆம் தேதி கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும். டிச.1, டிச.2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்யலாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

News November 28, 2024

பின்வாங்கும் முதலீட்டாளர்கள்; நெருக்கடியில் அதானி குழுமம்!

image

USAவில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக அதானி குழுமம் அரசியல் & சட்ட நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இன்னொரு பக்கம், அந்நிறுவனத்தில் $50 பில்லியன் முதலீடு செய்யவிருந்த Total Energiesபோன்ற சர்வதேச முதலீட்டாளர்கள், தங்களது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளனர். எதிர்மறை தாக்கங்களால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள அந்நிறுவனம் நிதிசார்ந்த அபாயங்களை சந்திக்க நேரிடலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

News November 28, 2024

தலைகீழாக மாறும் கே.எல்.ராகுல் Career…

image

கிரிக்கெட் வீரர்களின் ஜாதகத்தை கணித்து வரும் ஜோதிடர் பிரஷாந்த் கினி, கே.எல்.ராகுலின் ஜாதகத்தையும் கணித்திருக்கிறார். அவர் கூறும் போது, டிச.3ல் இருந்து ராகுலுக்கு நல்ல காலம் பிறக்க போவதாக கணிக்கிறார். IPL 2025ல் அவர் சிறப்பாக ரன்களை குவிப்பார், 2025 செப்.-2026 ஜூன் வரை சர்வதேச கிரிக்கெட்டில் ராகுல் ஜொலிப்பார் என்கிறார். பிப்.2027 வரை ராகுலின் கிரிக்கெட் உச்சத்தில் இருக்கும் என்றும் கூறுகிறார்.

News November 28, 2024

280 கி.மீ. வேகம்… அதிவேக ரயில்களை தயாரிக்கும் ICF!

image

மணிக்கு 280 Km வேகத்தில் செல்லும் திறன்கொண்ட அதிவேக ரயிலை சென்னையில் உள்ள ICFஆலை தயாரித்து வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்த ரயில் அதிவேகமாக செல்ல ஏதுவாக குறைந்த எடை, அதிக வெப்பம் தாங்கும் ஆற்றல், காற்று புகாத வகையில் மிக நுட்பமான நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. இதன் ஒரு ரயில் பெட்டியை தயாரிக்க சுமார் ₹28 கோடி செலவிடப்படுவதாக அறியமுடிகிறது.

News November 28, 2024

JUST NOW: தங்கம் விலை குறைந்தது

image

ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் 7,105க்கும், சவரன் தங்கம் ரூ.56,840க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ. 15 குறைந்து ரூ.7,090ஆக விற்கப்படுகிறது. அதேபோல் 1 சவரன் தங்கம் ரூ.56,720க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி ரூ.98க்கும், 1 கிலோ ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News November 28, 2024

பதவி முடிவடைவதற்குள்..தீவிரம் காட்டும் பைடன்

image

ஜனவரியில் பதவிக்காலம் முடிவடைவதற்குள் பைடன் உக்ரைன் ராணுவத்தை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் மேலும் ₹6,120 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்ப வாய்ப்புள்ளதாம். இதற்கான ஒப்புதலை விரைவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை புடின் எச்சரித்து இருந்தார்.

error: Content is protected !!