India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘நயன்தாரா – பியாண்ட் தி ஃபேரி டேல்’ டாக்குமெண்ட்ரியை பிரபல எழுத்தாளர் ஷோபா டே கடுமையாக விமர்சித்துள்ளார். 45 நிமிட வீடியோவில் ரசிக்கும்படியாக எதுவும் இல்லை என தெரிவித்துள்ள அவர், திருமணத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் போக்கு என்றும் சாடியுள்ளார். ஷோபா டேவின் இந்த விமர்சனத்தை பலரும் லைக் செய்து வரும் நிலையில், இது நயன்தாராவின் தனிப்பட்ட உரிமை என சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் Ex அமைச்சர்கள் முன்னிலையில் மதுரை உள்ளிட்ட இடங்களில் கட்சி நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், சேலத்தில் நாளை அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு Ex அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி தலைமை தாங்க இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களை வர வேண்டாம் எனக் கூறிவிட்டு, இபிஎஸ் தலைமை தாங்கி நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்பை வைகோ பகிர்ந்துள்ளார். மதிமுக சார்பில் நடைபெற்ற மாவீரர் தினக் கூட்டத்தில் பேசிய அவர், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை முன்பு சந்தித்தபோது, அவர் வைத்திருந்த சயனைட் குப்பியை தன்னிடம் அளித்ததாக தெரிவித்தார். அந்த குப்பியை இன்னும் தாம் பத்திரமாக வைத்திருப்பதாகவும் வைகாே கூறினார்.
நலிவடைந்த மக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை சுருட்டினால் என்னவென சொல்வது. கேரள அரசு மாதம் 62 லட்சத்திற்கு ரூ.1,600வழங்கும் ஓய்வுதியம் தகுதியுடையவர்களுக்கு தான் செல்கிறதா? என ஆய்வு செய்ய, இதில் 1,498 பேர் சிக்கியுள்ளார்கள். இவர்களெல்லாம் அரசாங்கத்தின் உயரதிகாரிகள். சிலர் கல்லூரி பேராசிரியர்கள் வேறு. இவர்களுக்கு தண்டனையாக சுருட்டிய காசுக்கு வட்டி போட்டு வசூலிக்க முடிவெடுத்துவிட்டது அரசு.
ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சியின் போது இடது கட்டை விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில், முழுமையாக உடல் நலம் பெற அவரை 10 – 14 நாட்கள் வரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
புதிதாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலத்தில் கடல் நீர் அரிப்பு பிரச்னையை தீர்க்க முறையான நடவடிக்கை இல்லை என தெற்கு ரயில்வே ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியதாகவும், சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் அதிக ஒலி எழுவதாகவும் கூறியுள்ளது. புதிய பாலத்தில் உள்ள குறைகளை முழுமையாக மறு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என்றும் இந்திய ரயில்வேயிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 2024 – 25 கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ‘முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ வரும் ஜன.25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் 1,000 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாதம் ₹1000 உதவித்தொகை வழக்கப்படவுள்ளது. <
ஓய்வூதியத்தை நிறுத்தி வைப்பது கொடூரம் என்று கர்நாடக ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற முன்னாள் மாநகராட்சி அதிகாரி ஒருவர், தனக்கு எதிரான விசாரணை நிலுவையில் இருப்பதை வைத்து ஓய்வூதியம், பிற பலன்களை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறி வழக்குத் தொடுத்துள்ளார். இதை விசாரித்த ஐகோர்ட், 1% வட்டியுடன் சேர்த்து ரூ.9.5 லட்சத்தை 2 மாதங்களுக்குள் அளிக்க உத்தரவிட்டது.
தமிழக அரசின் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நவ. 31ல் வேலூர், திருச்சியில் நடைபெறுகிறது. குடியாத்தம் தரணம்பேட்டை திருவள்ளுவர் அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சி அரியமங்கலம் சேஷசாயி தொழில் நுட்பப் பயிலகத்திலும் (SIT) முகாம்கள் நடைபெறுகின்றன. 30 ஆயிரம் காலியிடங்களுக்கு 8ம் வகுப்பு முதல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
நடிகர் – எழுத்தாளர் வேலராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நெல்லையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர்.எஸ். முருகனின் மகனுடன் வைஷ்ணவிக்கு நடைபெற்ற திருமணம் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது. பல்லாக்கில் பெண் அழைப்பு தொடங்கி தங்க ஜரிகை கொண்ட ₹8 லட்சத்தில் புடவை, ₹3 லட்சத்தில் ஜாக்கெட் என அசத்தியுள்ளார்கள். நகை மட்டும் 600 சவரன் என்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.