News November 28, 2024

அரசு நடத்தும் முகாம்: 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு…

image

தமிழக அரசின் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நவ. 31ல் வேலூர், திருச்சியில் நடைபெறுகிறது. குடியாத்தம் தரணம்பேட்டை திருவள்ளுவர் அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சி அரியமங்கலம் சேஷசாயி தொழில் நுட்பப் பயிலகத்திலும் (SIT) முகாம்கள் நடைபெறுகின்றன. 30 ஆயிரம் காலியிடங்களுக்கு 8ம் வகுப்பு முதல், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

Similar News

News November 10, 2025

மீண்டும் வருகிறார் 90s கிட்ஸ் சூப்பர் ஹீரோ சக்திமான்

image

இன்றைய இளம் தலைமுறைகள் கொண்டாடுவதற்கு பல சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஆனால் 90s கிட்ஸின் ஒரே சூப்பர் ஹீரோ சக்திமான் மட்டுமே. அப்படிப்பட்ட சக்திமான் கதைகள் இப்போது ஆடியோ வடிவில், 40 எபிசோட் சீரிஸாக வந்துள்ளன. இந்த கதைகள் 2K கிட்ஸுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என ஆடியோ சீரிஸை வடிவமைத்து வெளியிட்ட பாக்கெட் FM நம்பிக்கை தெரிவித்துள்ளது. சக்திமானின் தீவிர ரசிகர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க..

News November 10, 2025

தங்க நகை கடன்… மக்களுக்கு அதிர்ச்சி

image

தங்க நகை கடன் வழங்குவதில் RBI புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடன் பெறுபவர்கள் அந்த நகை தனக்கு சொந்தமானது என நிரூபிக்க ரசீதை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2026 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த அறிவிப்பை RBI வெளியிட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், அது திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 10, 2025

இடிக்கப்படும் நேரு ஸ்டேடியம்!

image

டெல்லியின் அடையாளமாக திகழும் நேரு ஸ்டேடியம் இடிக்கப்பட உள்ளது. 1982-ல் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் விளையாட்டு உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், இங்கு 102 ஏக்கர் பரப்பளவில் நவீன ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளது. 2036 ஒலிம்பிக் போட்டிகளே ஸ்போர்ட்ஸ் சிட்டியின் முக்கிய இலக்காகும்.

error: Content is protected !!