India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் இந்திய அணி வீரர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. Prime Minister’s XI அணிக்கு எதிரான 2 நாள் பிங்க் பால் டெஸ்டில் விளையாடுவதற்காக கான்பெரா சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் அங்குள்ள பார்லிமென்ட் ஹவுஸிற்கு சென்றனர். அப்போது கான்பெரா பார்லிமென்ட் ஹவுஸ் உள்ள எம்பிக்கள் மத்தியில் ரோஹித் ஷர்மா உரையாற்றினார்.
வங்கக்கடலில் புயல் உருவாகி வரும் நிலையில், இரவு 10 மணி வரை கீழ்கண்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தி.மலை, பெரம்பலூர், திருச்சி, தேனி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்களிடம் போதுமான ஆக்ரோஷம் இல்லை என அந்நாட்டு முன்னாள் வீரர் மார்க் வாக் விமர்சித்துள்ளார். இந்திய வீரர்களுக்கு எதிராக ஷார்ட் பந்துகளை ஆஸி. வீரர்கள் வீசவில்லை என்ற குறை கூறிய அவர், அவ்வாறு செய்திருந்தால் இந்திய வீரர்கள் திணறியிருப்பார்கள் என்றார். ஜெய்ஸ்வால் அபாயகரமான வீரராக இருப்பதாகவும், அவரை வீழ்த்த AUS பவுலர்கள் முயல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவை எம்பியாக பிரியங்கா பதவியேற்றிருப்பதை சுட்டிக்காட்டி ராகுலுக்கு மேலும் பலம் கிடைத்திருப்பதாக ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். அரசியலை தனது சொந்த பாணியில் பிரியங்கா கையாள்வார் என்றும், அவரின் குடும்பத்தினரிடம் இருந்து அவர் நிறைய கற்று வைத்துள்ளார் என்றும் வதேரா கூறியுள்ளார். வயநாடுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் பிரியங்கா நிறைவேற்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
1 லட்சம் டன் குப்பை மலைக்குள், தன் ரூ.5,900 கோடி பிட்காயின்ஸை தேடிக் கொண்டிருக்கிறார் UKவின் நியூபோர்ட் நகரை சேர்ந்த ஹோவல்ஸ். ஹோவல்ஸின் Ex.காதலி, அவரின் உடமைகளை அண்மையில் குப்பையில் வீசியுள்ளார். அதிலிருந்த ஹார்ட் டிரைவில் தான் 8,000 பிட்காயின்ஸை ஹோவல்ஸ் வைத்திருந்தார். இப்போது பிட்காயின் ரேட் எகிற, குப்பையிலுள்ள தன் புதையலை எடுக்க நகர சபையுடன் போராடிக் கொண்டிருக்கிறார் ஹோவல்ஸ். SO SAD!
BGT தொடரை இந்திய அணி சிறப்பாக தொடங்கியுள்ளதாக PM மோடி கூறியுள்ளார். AUS PM ஆண்டனியை Xஇல் டேக் செய்துள்ள அவர், Men in Blueக்கு 1.4 பில்லியன் இந்தியர்களின் வலுவான ஆதரவு உள்ளதாகவும், உற்சாகமான ஆட்டத்தை காண ஆவல் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, PM மோடியை Xஇல் டேக் செய்து பதிவிட்ட ஆண்டனி, AUS அணிக்கு பெரிய சவால் காத்திருப்பதாகவும், வீரர்கள் தங்களது பணியை சிறப்பிக்க ஆதரவளிப்பதாகவும் கூறியிருந்தார்.
கடந்த 2018-ல் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த ‘96’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 90s கிட்ஸ் மத்தியில் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களின் மனதையும் இப்படம் வென்றது. இந்நிலையில், இப்படத்தின் 2-ம் பாகத்தை, பிரேம்குமார் விரைவில் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டான் பிச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூரை தொடர்ந்து, தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இன்னும் சில மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளிடம் திரும்ப செலுத்தப்படாத கடன், வாராக் கடன் எனப்படுகிறது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் மார்ச் வரையிலான இந்த நிதியாண்டில் வாராக்கடன் 18% குறைந்துள்ளது. அதாவது ₹2.08 லட்சம் கோடியிலிருந்து ₹1.70 லட்சம் கோடியாக சரிந்துள்ளது. இருப்பினும், PNB, கனரா, HDFC, BOI, இந்தியன் வங்கி, AXIS-இல் அக்கடன் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக PNB ₹18,317 கோடி வாராக்கடனுடன் முதலிடத்தில் உள்ளது.
முகமது ஷமியை ஆஸி. அணிக்கு எதிரான BGT தொடரில் சேர்க்க BCCI காலக்கெடு விதித்துள்ளது. தற்போது சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் விளையாடி வரும் ஷமிக்கு BCCI மருத்துவ குழுவினர் ஒவ்வொரு ஓவர் முடிந்த பிறகும் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் அதிக எடையுடன் இருப்பதாகவும், உடற்தகுதியை நிரூபிக்க இன்னும் 10 நாட்களில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றும் பிசிசிஐ அவரிடம் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.