News November 28, 2024

டீம் இந்தியாவுடன் செல்பி எடுத்த ஆஸி. PM

image

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் இந்திய அணி வீரர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. Prime Minister’s XI அணிக்கு எதிரான 2 நாள் பிங்க் பால் டெஸ்டில் விளையாடுவதற்காக கான்பெரா சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் அங்குள்ள பார்லிமென்ட் ஹவுஸிற்கு சென்றனர். அப்போது கான்பெரா பார்லிமென்ட் ஹவுஸ் உள்ள எம்பிக்கள் மத்தியில் ரோஹித் ஷர்மா உரையாற்றினார்.

Similar News

News November 14, 2025

BREAKING: தேஜஸ்வி யாதவ் வெற்றி

image

பிஹார் தேர்தலில், RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தேஜஸ்வி யாதவும், BJP-ன் சதீஷ் குமாரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இழுபறி நீடித்த நிலையில், தற்போது 11,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

ராஜஸ்தான், தெலங்கானா இடைத்தேர்தலில் காங். வெற்றி

image

ராஜஸ்தானின் Anta தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் பிரமோத் ஜெயின் 69,571 வாக்குகள் பெற்று MLA-வாக தேர்வாகியுள்ளார். இதேபோல் தெலங்கானாவின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் நவீன் யாதவ் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.

News November 14, 2025

BREAKING: திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளுக்கும்…

image

அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை DCM உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். காரைக்குடியில் முதல்கட்டமாக 1,448 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை அவர் வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் ₹248 கோடி மதிப்பில் 5,34,017 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. தற்போது, வார விடுமுறை என்பதால் வரும் திங்கள்கிழமை முதல் சைக்கிள் விநியோகம் செய்யும் பணி தொடங்கும்.

error: Content is protected !!